Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஜாமீன் கிடைக்க கெஜ்ரிவால் புதிய உத்தி! அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை உண்ணுவதாக அமலாக்கப்பிரிவு குற்றச்சாட்டு

PRITHIVIRAJ18-04-2024
ஜாமீன் கிடைக்க கெஜ்ரிவால் புதிய உத்தி! அதிக சர்க்கரை கொண்ட  உணவுகளை உண்ணுவதாக அமலாக்கப்பிரிவு குற்றச்சாட்டு

மருத்துவ காரணங்களை அடிப்படையாக வைத்து ஜாமீன் பெறுவதற்காக ஏற்கெனவே டைப்-2 நீரிழிவு நோய் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிக சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்கள், இனிப்புகள், மாம்பழங்களை உண்கிறார் என்று அமலாக்கப்பிரிவு நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

அமலாக்கப்பிரிவு புகாரையடுத்து, சிபிஐ, அமலாக்கப்பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, “ திகார் சிறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி கெஜ்ரிவால் என்ன சாப்பிடுகிறார் என்பது குறித்த அறிக்கை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

Arvind-Kejriwal-22.jpg

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடலில் சர்க்கரை அளவு ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதால், அவரின் உடல்நிலை குறித்து பரிசோதிக்க தனது குடும்ப மருத்துவரிடம் வீடியோ கான்பிரசிங் மூலம் ஆலோசிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராகேஷ் சயால் உத்தரிவிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், திகார் சிறை அதிகாரிகள் நாளைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நாளை மீண்டும் விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.

அமலாக்கப்பிரிவு சார்பில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் “ டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மருத்து ரீதியாக ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக டைப்-2 நீரிழிவு நோய் இருக்கும் கெஜ்ரிவால் அளவுக்கு அதிகமாக இனிப்பு உணவுகள், மாம்பழங்கள், ஆலு பூரி, இனிப்பு வகைகளை தினசரி உண்கிறார்.

இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்து மருத்துவ ரீதியாக ஜாமீன் கிடைக்க கெஜ்ரிவால் திட்டமிடுகிறார்”எ னத் தெரிவிக்கப்பட்டது.

VBK-Enforcement-Directorate.jfif

டெல்லி மதுக்கொள்கை ஊழல் வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரில் கைதாகி சிறையில் இருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான நீதிமன்ற காவல் வரும் 23ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் நேற்று சிறைக்கு சென்று முதல்வர் கெஜ்ரிவாலைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் “ சிறையில் தன்னை அதிகாரிகள் ஒரு தீவிரவாதி போல் நடத்துகிறார்கள்” என கெஜ்ரிவால் வேதனைதெரிவித்திருந்தார்.

இது குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில் “ திகார் சிறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை தீவிரவாதி போன்று நடத்துகிறார்கள். எந்தவிதமான வசதியும் இன்றி கொடுங்குற்றவாளி போன்று கெஜ்ரிவால் இருப்பது வேதனையாக இருக்கிறது.

அவர் என்ன தவறு செய்தார், நானும், கெஜ்ரிவாலும் சந்திக்கும்போது இருவருக்கும் இடையே கண்ணாடி சுவர் இருந்தது” எனத் தெரிவித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்