Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

பூத் ஏஜெண்டுகள் யார்? அவர்கள் முக்கியத்துவம் என்ன? பணி என்ன?

VASUKI RAVICHANDHRAN18-04-2024
பூத் ஏஜெண்டுகள் யார்? அவர்கள் முக்கியத்துவம் என்ன? பணி என்ன?

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவை என 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் மக்களவை தேர்தல் நாளை எப்ரல் -19 ஆம் தேதி நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களது தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் ஏஜெண்டுக்களை நியமணம் செய்வர். அந்த பூத் ஏஜெண்டுக்கள் ஒரு ஊரில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு கட்சிக்கும் ஒருவர் வீதம், அனைத்து கட்சிகளுக்கும் பூத் ஏஜெண்டுக்கள் இருப்பார்கள். அவர்கள் வாக்களிக்கும் நபர் அவர்தானா என்று கள்ள ஓட்டு விழாத வண்ணம் வாக்களரின் பெயர், அவருக்கு இங்கு வாக்குள்ளதா என்பது பற்றியும் சரிபார்த்து வாக்குப்பதிவை கவனிப்பார்கள். தேர்தல் நாள் முழுவதும் வாக்குச்சாவடியில் இருந்து, வாக்குப்பெட்டிகள் கண்காணிப்பு மையத்திற்கு சென்ற பிறகே அவர்களது பணிகள் நிறைவடையும்

பூத் ஏஜெண்ட் கொண்டுபோக வேண்டியவை

1.FORM 10

2.PAD

3.வாக்காளர்கள் வருகையை குறிக்கும் படிவம்

4.வாக்காளர் பட்டியல்

5.PEN, PENCIL, குடிநீர்

  1. வாக்காளர் அடையாள அட்டை

பூத் ஏஜெண்ட் பணிகள்:

  1. காலை 5.30 மணிக்கு நாம் பூத்திற்கு செல்ல வேண்டும்.

  2. நமது FORM 10யை கொடுத்து அதிகாரியிடம் கையெழுத்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

  3. (MOCK POLL) மாதிரி வாக்குபதிவில் கலந்து கொண்டு நமது வாக்கு பதிவு செய்து சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

  4. 7 மணிக்கு வாக்கு பதிவு துவங்கிய உடன் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் மற்றும் வாக்காளர் பட்டியலில் சரியாக குறித்து கொள்ள வேண்டும்.

  5. நமது துணை முகவரையும் அழைத்து சென்று கையெழுத்து பெற்று கொள்ளலாம்.

  6. நமது துணை முகவர் வராமல் வெளியே செல்ல கூடாது.

  7. மாலை 4 மணிக்கு மேல் கண்டிப்பாக வெளியே செல்ல கூடாது.

  8. அனைத்து வாக்கு பதிவு முடிந்தவுடன் கடைசியாக நமது சீல் வைத்த பின் 17C படிவம் அதிகாரியிடம் இருந்து பெற்று வந்து நமது பொறுப்பாளரிடம் கொடுக்கவேண்டும். மேற்கண்ட அனைத்து பணிகளையும் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும் 17சி படிவம் பெறாமல் வெளியே வரக்கூடாது.

இதுவே பூத் ஏஜெண்டுக்களின் வேலையாக உள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்