Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க வைராக்கியத்தோடு படித்தேன் - ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இன்பா பேட்டி

SAMYUKTHA17-04-2024
குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க வைராக்கியத்தோடு படித்தேன் - ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இன்பா பேட்டி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கடந்தாண்டு செப்டம்பரில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எழுத்து தேர்வும், அதனைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி முதல் நேர்முக தேர்வுகளும் நடத்தப்பட்டன. நேற்று இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் 1,016 பேர் மத்திய அரசு குடிமை பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், கோவை மண்டல பி.எப் அலுவலகத்தில் எஸ்எஸ்ஏ கிளார்க்காக பணியாற்றி வரும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த இன்பா (25) என்பவர் அகில இந்திய அளவில் 851வது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு சக ஊழியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த வெற்றி குறித்து இன்பா கூறியதாவது: எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர். 10ம் வகுப்பு வரை அங்குள்ள அரசு பள்ளியிலும் பிளஸ்1, பிளஸ்2 செங்கோட்டையிலும் படித்தேன். பிறகு, கோவையில் உள்ள சிஐடி தொழில்நுட்ப கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்தேன். அது முடித்தவுடன், ஐஏஎஸ் தேர்வுக்காக சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் ஓராண்டு படித்தேன். முதன்மை தேர்வு 2 முறை எழுதியும் வெற்றிபெற முடியவில்லை. 3வது முறை வெற்றி பெற்றேன். பிறகு, சென்னையில் உள்ள தமிழக அரசு சிவில் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்டில் ஐஏஎஸ் பிரதான தேர்வுக்கு படித்தேன். இப்போது 851வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறேன். எனது அப்பா, அரசு பஸ் கண்டக்டர். அம்மா, பீடி சுற்றும் ெதாழிலாளி. குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க வைராக்கியத்தோடு படித்தேன். எனது கடின உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த ரேங்க்-கிற்கு ஐஏஎஸ் கிடைக்குமா? என தெரியவில்லை. ஆனாலும், எனது பெரும் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. பொதுவாக, ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற, வெறும் புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. மாதிரி வினாத்தாள்களை பெற்று, அதிகம் பயிற்சி பெற வேண்டும். முழு ஈடுபாட்டுடன், இந்த பயிற்சி மேற்கொண்டால், வெற்றி நிச்சயம்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்