Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

பல கோடி தங்க நகைகள், கிரானைட் கற்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை

SAMYUKTHA17-04-2024
file photo
பல கோடி தங்க நகைகள், கிரானைட் கற்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை

மதுரையில் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த பல கோடி மதிப்புள்ள தங்கம், கிரானைட் கற்கள் குறித்து பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வணிக வரித்துறையில் பறக்கும் படையினர் மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்ட எல்லையான ரிங்ரோடு பகுதியில் வந்த வாகனத்தை வணிக வரித்துறை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தது தெரிந்தது. அந்த லாரியை அமலாக்கப்பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதுபோல சிவகங்கையிலிருந்து பூவந்தி வழியாக கர்நாடகாவுக்கு சென்ற லாரியை, துணை மாநில வரி அலுவலர் ஆண்டி தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் கிரானைட் கற்கள் இருந்தது. அதற்கான ஆவணங்கள் சரிவர இல்லாததால் பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் கற்களின் அளவை எண்ணிப்பார்த்தனர். குறைத்து மதிப்பிடப்பட்டு பில் இருந்தது தெரிந்தது. அவற்றிற்கு அபாரதம் விதித்து பணம் செலுத்திய பின்னர் லாரியை விடுவித்தனர். இதுகுறித்து வணிகவரித்துறை இணை இயக்குனர் உஷா கூறும்போது, ‘‘தங்க நகைகள் கொண்டு வந்த லாரி பிடிபட்டுள்ளது. அதில் உள்ள ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு ஏற்ப நகைகள் வரி செலுத்தி சரியாக இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்