Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

சென்னையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது தெரியுமா?

LENIN DEVARAJAN18-04-2024
சென்னையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது தெரியுமா?

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சேமித்துவைக்கும் கிடங்குகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பணிகள் போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது எந்த அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மாநில போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

12 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, அதில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 ஆவணங்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தமிழகம் முழுவதும், 73.83% வாக்குகள் பதிவாகியது. அதில், அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92% வாக்குகள் பாதிவாகின. குறைந்தபட்சமாக தலைநகரம் சென்னையில் 59.06% வாக்குகள் பதிவாகியது. அந்த தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களை சென்னையில் உள்ள முக்கிய கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டது.

அதேபோல்,மக்களவை தேர்தலுக்கு சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் வாக்கு எதிரங்களை சேமித்து வைக்கவுள்ள கிடங்கின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில்,

1.ஆர்.கே.நகர் தொகுதி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தண்டையார்பேட்டை 2. பெரம்பூர் தொகுதி – டாக்டர் அம்பேத்கர் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி, வியாசர்பாடி 3.கொளத்தூர் தொகுதி – சென்னை மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் 4.வில்லிவாக்கம் தொகுதி – ஐ.சி.எஃப் மேல்நிலைப்பள்ளி 5.திரு.வி.க.நகர் தொகுதி – சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாதாவரம் நெடுஞ்சாலை, பெரம்பூர் 6.எழும்பூர் தொகுதி - பிரஸிடென்ஸி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் 7.இராயபுரம் தொகுதி – புனித பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளி 8.துறைமுகம் தொகுதி – பாரதி மகளிர் கல்லூரி 9.சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி – என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி 10.ஆயிரம் விளக்கு தொகுதி – சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம் 11.அண்ணா நகர் தொகுதி – டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி,அரும்பாக்கம் 12.விருகம்பாக்கம் தொகுதி – மீனாட்சி பொறியியல் கல்லூரி, கே.கே.நகர் 13. சைதாப்பேட்டை தொகுதி – ஆடவர் அரசு கலைக் கல்லூரி, நந்தனம் 14.தியாகராய நகர் தொகுதி – டாக்டர் அம்பேத்கர் சமூக நலக் கூடம், கோடம்பாக்கம் 15.மயிலாப்பூர் தொகுதி – ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மந்தைவேளி 16.வேளச்சேரி தொகுதி – சென்னை மேல்நிலைப் பள்ளி, திருவான்மியூர்

ஆகிய கிடங்குகளில் வாக்கு எந்திரங்கள் சேமித்து வைக்கப்படவுள்ளன.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்