Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்கள்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

VASUKI RAVICHANDHRAN18-04-2024
வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்கள்:  சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

மக்களவை தேர்தல் நாளை எப்ரல் -19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100 சதவீதம் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவை என 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

தென் மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் சென்னையில் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தனியார் நிறுவங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, தனியார் நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு அளித்துள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்களும் தங்களது சொந்த ஊர் நோக்கி செல்வார்கள் என்று அரசு சிறப்பு பேருந்துகளையும் இயக்க உத்தரவிட்டது. அதன்படி தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ள நிலையில், பெரும்பாலானோர் முன்பதிவில்லா, பேருந்துகள், ரயில்களில் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்றும் சென்னையில் இருந்து 777 பேருந்துகள் உட்பட தமிழகம் முழுவதும் 2,692 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 17 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

முன்பதிவுக்கு TNSTC செயலி மற்றும் www.tnstc.in இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்