Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வீதிகளில் எதிர்ப்பவர்கள், கட்சியின் டிஎன்ஏ நீங்கள் – காங்., தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பதிவு

PRIYA18-04-2024
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வீதிகளில் எதிர்ப்பவர்கள், கட்சியின் டிஎன்ஏ நீங்கள் – காங்., தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பதிவு

ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக வீதியில் போராடுபவர்கள் நீங்கள் என்றும், கட்சியின் டிஎன்ஏ நீங்கள் தான் என்று கட்சித் தொண்டர்களுக்கு தனது எக்ஸ் தளத்தில் சிறப்பு பதிவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, நாளை மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் அக்கட்சியின் தொண்டர்களுடம் மனம்திறந்து பேசி உள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தொண்டர்களுக்காக சிறப்பு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது –

நீங்கள் காங்கிரஸ் தொண்டர்கள். எங்கள் முதுகெலும்பு, நமது கட்சியின் டிஎன்ஏ. நமது சித்தாந்தத்தை நீங்கள் புரிந்து கொண்டு அதற்காக ஒவ்வொரு நாளும் போராடுகிறீர்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. தேர்தல்கள் நடக்கிறது. பாஜக –ஆர்எஸ்எஸ் ஆகியவை இந்தியாவின் சிந்தனைகளுக்கு எதிரானவை. அவர்கள் நமது அரசியலமைப்பை, நமது தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளை தாக்குகிறார்கள். நமது நீதித்துறையையும் தாக்குகிறார்கள். நீங்கள் தான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை வீதிகளில், கிராமங்களில், எல்லா இடங்களிலும் எதிர்க்கிறீர்கள். நீங்கள் தான் பாதுகாவலர்கள்.

நமது தேர்தல் அறிக்கை 2024ல் முக்கிய யோசனைகளை சேர்க்க நீங்கள் தான் காரணமாக இருந்தீர்கள். நாங்கள் உங்களை நம்பி உள்ளோம். நாங்கள் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளோம். எனது நல்வாழ்த்துக்களை உங்களுக்கு அனுப்புகிறேன். நாம் பாஜகவையும் அதன் சித்தாந்தத்தையும் தோற்கடிப்போம்!

இவ்வாறு கூறியிருந்தார்.

மக்களவையின் 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்