Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

கேரளாவில் பாஜகவுக்கு ஆதரவாக இவிஎம் எந்திரத்தில் தில்லுமுல்லு: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

PRITHIVIRAJ18-04-2024
கேரளாவில் பாஜகவுக்கு ஆதரவாக இவிஎம் எந்திரத்தில் தில்லுமுல்லு: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் நடந்தி மாதிரி(போலி) வாக்கெடுப்பில் 4 மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகள் பதிவானது குறித்து நாளேடுகள், சேனல்களில் செய்தி வெளியானதையடுத்து, அது குறித்து விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அளித்த தகவல்களையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரத்துடன் பயன்படுத்தப்படும் விவிபிஏடி சிலிப்புகளை 100 சதவீதம் மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

1616066711_supreme-court-4.avif

இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ள ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய விவிபிஏடி சிலிப்புகளை பார்த்தபின் அதனை சீல் வைக்கப்பட்ட பெட்டியில் போட அனுமதிக்க வேண்டும். வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வது அடிப்படை உரிமையாகும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று(17ம்தேதி) நடந்த மாதிரி வாக்கெடுப்பில் 4 மின்னணு வாக்கு எந்திரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகள் பதிவாகின என்று சேனல்களில் செய்தி வெளியானது.

மின்னணு வாக்கு எந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும், ரகசிய மென்பொருளை பதிவேற்றம் செய்து செயல்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும். வாக்குகளை ஆளும் கட்சிக்கு சாதகமாக பதிவு செய்ய முடியும் என்று மனுதாரர்கள் கவலை தெரிவித்தனர்.

மனுதாரர்களின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இது குறித்து தெரிவித்ததும், நீதிபதிகள் அமர்வு, மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங்கிடம், தேர்தல் ஆணையம் சார்பில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, இந்த விவகாரம் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.

election-commission-of-india (1).jpg

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் இவிஎம் எந்திரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகள் பதிவானது குறிக்கு ஆளும் இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி இருவரும் தனித்தனியாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளி்த்து வாக்கு எந்திரங்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்