Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

பிரதமர் மோடியை விமர்சித்த பாஜக சிறுபான்மைப் பிரிவு தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்

PRITHIVIRAJ25-04-2024
பிரதமர் மோடியை விமர்சித்த பாஜக சிறுபான்மைப் பிரிவு தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்

ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை விமர்சித்த பாஜக சிறுபான்மைப்பிரிவு தலைவர் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா நகரில் கடந்த ஞாயிறன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் வளங்களை, பிறசமூகத்தின் சொத்துக்களைப் பிரித்து முஸ்லிம்களுக்கு வழங்கும்”எனப் பேசினார்.

modi-1712886782.jpg

ஆனால் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருந்தார். ஆனால், அந்தத் தேதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவ்வாறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது தெரிந்தது.

பிரதமர் மோடியின் மதவாதக் கருத்துக்கு காங்கிரஸ், இடதுசாரிகள், உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கண்டனம் தெரிவித்தன. தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்க வேண்டும், நடத்தை விதிகளை மீறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின.

ராஜஸ்தான் பாஜக பிகானிர் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவராக இருப்பவர் உஸ்மான் கானி. கடந்த சில நாட்களுக்கு முன் புதுடெல்லியில் ஒரு சேனலுக்கு பிரதமர் மோடி பேசியது தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்தார்.

1850199-bjp0001.webp

அப்போது கானி கூறுகையில் “ பிரதமர் மோடி பேசியது மிகுந்த வேதனையாக இருக்கிறது, அவரின் கருத்துகளைக் கண்டிக்கிறேன். பிரதமர் மோடியின் தேவையற்ற பேச்சால் பாஜக 3 அல்லது 4 தொகுதிகளில் தோற்கும். நான் முஸ்லிம்களிடம் வாக்குச் சேகரிக்கச் சென்றால், மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் பேச்சைக் குறிப்பிட்டு என்னிடம் பேசுகிறார்கள்,

அவரிடம் இருந்து எனக்குப் பதில் தேவை. ஜாட் சமூகத்தினரும் பிரதமர் மோடி மீது கோபமாக இருக்கிறார்கள், சுரு உள்ளிட்ட பல தொகுதிகளில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் கிடைக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

உஸ்மான் கானியின் பேச்சு குறித்து பாஜக மாநில தலைமையிடத்துக்கு தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியை விமர்சித்தமைக்காக, சிறுபான்மைப் பிரிவு தலைவர் உஸ்மான் கானி மீது பாஜக நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்கியது.

பாஜக மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஓம்கர் சிங் லகாவத் கூறுகையில் “ உஸ்மான் கானி கட்சியின் தோற்றத்தை அவமதித்ததை கட்சி கவனத்தில் கொண்டுள்ளது. ஆதலால், கானியை அடிப்படை உறுப்பினரிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்