Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முடிக்க பாஜக திட்டம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

PRITHIVIRAJ26-04-2024
எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முடிக்க பாஜக திட்டம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்தியாவில் பட்டியலினத்தவர்கள், பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையை முடிவுக்கு கொண்டுவர மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:

2021ம் ஆண்டுவரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தவில்லை. ஏறக்குறைய 3 ஆண்டுகள் தாமதித்துவிட்டது. ஏன் தெரியுமா.

இந்தியாவில் இருந்து இடஒதுக்கீட்டு முறையை அகற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு நினைக்கிறது. பட்டியலினத்தவர்கள், பழங்குடியின மக்கள் தொகை குறித்து ஆட்சியாளர்கள் தெரி்ந்து கொள்ளவிரும்பவில்லை.

அதன்வெளிப்பாடுதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தாமதப்படுத்தினர். உணவுப் பாதுகாப்பு் சட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன.

2021ம் ஆண்டில் உலகில் பல நாடுகள் கொரோனா காலத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தின.

இதில் எப்படி இந்தியா மட்டும் நடத்தாமல் தனித்து நின்றது. 2022, 2023ம் ஆண்டுவரை 2024ம் ஆண்டுவரை ஏன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தவில்லை.

உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்காக பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களை நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் எங்காவது, வளங்களை மறுபகிர்வு செய்வோம் என்று கூறப்பட்டுள்ளதா என்று பிரதமர் மோடி விளக்க வேண்டும்

சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்துவதில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும். 2011 சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு குறித்த முழுமையான புள்ளிவிவரங்களை

ஏன் மத்திய அரசு வெளிப்படையாக வெளியிடவில்லை. நமது இடஒதுக்கீட்டிற்கு ஜாதி தான் அடிப்படை, அதை விட்டு ஓடி இருக்க முடியாது. சாதி குறித்து சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை இதுவரை ஏன் மத்திய அரசு வெளியிடவில்லை.

ஜெய் ஷா, அமித் ஷா தயாரித்த பிட்சில் பிரதமர் மோடி விளையாட விரும்புகிறார். அந்த ஆடுகளத்தில் நாங்கள் விளையாடமாட்டோம். நாங்கள் வேலையின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு,அதிகரித்து வரும் பொருளாதார சமநிலையின்மை கொண்ட ஆடுகளத்தில்தான் விளையாடுவோம்

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்