Logo
Logo

முக்கிய செய்தி:

விளையாட்டு

Jasprit Bumrah: ஐசிசி தரவரிசை: ஜஸ்பிரித் பும்ரா புதிய வரலாறு

PRITHIVIRAJ07-02-2024
Jasprit Bumrah: ஐசிசி தரவரிசை: ஜஸ்பிரித் பும்ரா புதிய வரலாறு

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல்முறையாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்து முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

விசாகப்பட்டிணத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வீழ்த்தி சிறப்பாகப் பந்துவீசியதையடுத்து, பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். தற்போது 881 புள்ளிகளுடன் ரபாடாவை கீழே இறக்கி பும்ரா முதலிடத்துக்கு உயர்ந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா 2வது இடத்திலும், இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 3வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்த வகையில் 4வது பந்துவீச்சாளர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன் சிங் பேடி ஆகியோர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

கடந்த 11 மாதங்களாக அஸ்வின் முன்னணியில் இருந்தநிலையில் அவரை கீழே இறக்கி, பும்ரா முதலிடத்துக்கு உயர்ந்துள்ளார். அஸ்வின் தற்போது 499 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் பெரிய சாதனைக்காக காத்துள்ளார்.

பும்ரா 881 புள்ளிகள், அஸ்வின் 904 புள்ளிகள், ஜடேஜா 899 புள்ளிகள் என இந்தியப் பந்துவீச்சாளர்கள் முதலிடத்தைப் பிடித்தபோது அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

பேட்டிங் வரிசையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 இடங்கள் முன்னேறி 29 வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். சுப்மான் கில் 14 இடங்கள் நகர்ந்து 38வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 828 புள்ளிகளுடன் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். ரவிந்திர ஜடேஜா 9-வது இடத்துக்கும், இங்கிலாந்தின் ஓலே ராபின்சன் 10-வது இடத்துக்கும் பின்னடைந்துள்ளனர்.

இலங்கை பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 2இடங்கள் முன்னேறி 6-வது இடத்துக்கும், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்சன் ஒரு இடம் நகர்ந்து 7-வது இடத்துக்கும், ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லேயான் 8வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்