Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

கடந்த 15 ஆண்டுகளில் சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி 2.3 மடங்கு அதிகரிப்பு

PRITHIVIRAJ29-04-2024
கடந்த 15 ஆண்டுகளில் சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி 2.3 மடங்கு  அதிகரிப்பு

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியைவிட சீனாவிலிருந்து இந்தியாவின் தொழிற்துறை பொருட்கள் இறக்குமதி 2.3 மடங்கு அதிகரித்துள்ளது, 21 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்று உலகளாவிய வர்த்தக ஆய்வு நிறுவனம்(ஜிடிஆர்ஐ) தெரிவித்துள்ளது.

வரும் ஆண்டுகளிலும் சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி கடுமையாக அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

20180-19ம் ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 7000 கோடி அமெரிக்க டாலராக இருந்த நிலையில் 2023-24ம் ஆண்டில் 10,100 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

import and Export.jpg

இந்தியாவின் 8 முக்கிய துறைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் சப்ளையில் முதன்மையான நாடாக சீனா இருந்து வருகிறது. குறிப்பாக கனரக எந்திரங்கள், ரசாயனங்கள், மருந்துப் பொருட்கள், ஜவுளித்துறை ஆகிய அதிகரித்துள்ளன. இதில் அதிகபட்சமாக மின்னணு துறையில்தான் இறக்குமதி அனைத்தையும்விட அதிகரித்துள்ளது.

அதேசமயம், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி 2018-19 முதல் 2023-24ம் ஆண்டுகளில் 1600 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 38700 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் சீனாவுக்கு 90 வகையான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய வணிகத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதில் குறிப்பாக இரும்புத்தாது, தொலைத்தொடர்பு சாதனங்கள், மின்னணு பொருட்கள் குறிப்பிடத்தக்கவை.

Chinaindia.jpg

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களில் 43.9 சதவீதம் மின்னணு சாதனங்கள், தொலைத்தொடர்பு பொருட்கள், மின்னணு பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, எந்திரங்கள், கனரக எந்திரங்கள் இறக்குமதி 39.7 சதவீதமும், ஜவுளி மற்றும் தணி இறக்குமதி 38.2 சதவீதம், ரசாயனம் மற்றும் மருந்துப் பொருட்கள் இறக்குமதி 26.8 சதவீதம், ஆட்டோமொபைல் இறக்குமதி 26 சதவீதம் இருக்கிறது.

இந்தியாவுக்கும் , சீனாவுக்கும் எல்லையில் மோதல், பதற்றமான சூழல் நிலவும் அதேவேளையில் சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி எந்தவிதத்திலும் குறையவில்லை என்பது தெரிகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2003 முதல் 2005 வரை சீனாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 1000 கோடி டாலராக இருந்தது. சீனாவுக்கான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, உபரியாக இருந்தது. 2005ம் ஆண்டுக்குப்பின் சீனாவின் ஏற்றுமதி ஆதிக்கம் அதிகரித்து, இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை உயரத் தொடங்கியது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்