Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

தேர்தல்கள் தன் கரங்களைவிட்டு நழுவிவிட்டன என மோடிக்குத் தெரியும்: ராகுல் காந்தி கணிப்பு

PRITHIVIRAJ25-04-2024
தேர்தல்கள் தன் கரங்களைவிட்டு நழுவிவிட்டன என மோடிக்குத் தெரியும்: ராகுல் காந்தி கணிப்பு

மக்களவைத் தேர்தல் பிரதமர் மோடியின் கரங்களில் இருந்து, கட்டுப்பாட்டை விட்டு நழுவிவிட்டன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளுக்கும், மோடியின் வாக்குறுதிகளுக்கும் வேறுபாடு தெளிவாக இருக்கிறது. தேர்தல்கள் தனது கைமீறி நழுவிட்டன என்பது பிரதமர் மோடி நன்கு அறிவார்.

modi.jpg

மத்தியில் இந்தியர்கள் மட்டுமே ஆட்சி செய்வதற்கு காங்கிரஸ் கட்சி உறுதியளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மாதந்தோறும் ரூ.8500 நிதியுதவி பெறலாம், இளைஞர்கள் ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் வேலையுடன் ஊதியம் பெறலாம். 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், விவசாயிகள் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்கப்படும்.

மோடியின் உறுதிமொழி என்னவென்றால், அதானியின் அரசு, நாட்டின் வளங்கள் கோடீஸ்வரர்களின் பாக்கெட்டில் இருக்கும். நன்கொடை வியாபாரம் மூலம் பணம் பறிக்கும் கும்பல், அரசியலமைப்புச்சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டப்படும், நிதிப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் விவசாயிகள். இரு கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகிறது.

Rahul-Gandhi-addresses-the-rally-ahead-of-the-Lok-_1713433841899.avif

காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கான லட்சாதிபதி இந்தியர்களை உருவாக்கும். தேர்தல்கள் கையைவிட்டு நழுவிவிட்டன என்று பிரதமர் மோடிக்கு தெரிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். அமராவதியில் நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தி்ல் ராகுல் காந்தி பேசுகையில் “ பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில், 22 முதல் 25 பேர்வரைதான்

கோடீஸ்வரர்களாகியுள்ளனர். அவர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் லட்சாதிபதிகளாக மாறுவார்கள். உலகின் எந்த சக்தியும் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற முடியாது. ஆனால், பாஜக அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற விரும்புகிறது” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்