Logo
Logo

முக்கிய செய்தி:

சினிமா

விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி.. புறக்கணித்த நடிகைகள்..!

VASUKI RAVICHANDHRAN20-01-2024
விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி..  புறக்கணித்த நடிகைகள்..!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம்தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் அரசுமரியாதையுடன் கோயம்பேட்டில்உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், தென்னிந்திய நடிகர்சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நேற்று விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை பெரும்பாலான நடிகைகள் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர். இதற்கு முழுக்க காரணம் நடிகர் சங்கம்தான் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். நடிகர்கள், நடிகைகள் என யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அவசரகதியில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர், விஜயகாந்த் படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகர், சண்முக பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகை தேவயானி, ரேகா, லதா, ராதிகா, சிமரன் என ஒரு சில நடிகைகள் மட்டுமே பங்கேற்றனர். பெரும்பாலான நடிகைகள் நிகழ்ச்சியை தவிர்த்துள்ளனர். அவர்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா அல்லது அழைப்பு விடுக்கப்பட்டும் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனரா என்பது கேள்விக்குறியாகாவே உள்ளது.

விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த தருணத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினால், முறைப்படி உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும், வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டார்களா என்று உடனிருந்து கவனித்தவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏனோதானோ என்று கடைமைக்கு நடத்தியிருக்கிறார்கள் தற்போதயை நடிகர் சங்க நிர்வாகிகள்.

நடிகர்கள் ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் நினைவேந்தல் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர். கமலஹாசன், விக்ரம், விஷால், ஜெயம்ரவி, சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர், ரமேஷ் கண்ணா,, கார்த்தி, நாசர், மன்சூர் அலி கான், கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் போடப்பட்டிருந்த பல இருக்கைகள் நிகழ்ச்சி முடியும் வரையிலும் காலியாகவே இருந்தது. மறைந்த முன்னாள் நடிகர் சங்க தலைவருக்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியில் திரையுலகினர் அனைவரும் ஒன்று திரண்டு நடத்தியிருந்தால் இன்று தலைப்பு செய்தியாக மாறியிருக்கும். அதற்கு நேர்மாறாக அரங்கேறியிருக்கிறது நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்