Logo
Logo

முக்கிய செய்தி:

விளையாட்டு

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு - ஸ்டாலின் பெருமிதம்

MARY RAJAKUMARI01-02-2024
இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு - ஸ்டாலின் பெருமிதம்

கேலோ விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 98 பதக்கங்களை வென்று 2-ம் இடம் பிடித்த தமிழ்நாடு, இந்தியாவின் விளையாட்டு நகரமாக திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நேற்றுடன் முடிவடைந்த கேலோ விளையாட்டு போட்டிகளில் 98 பதக்கங்களை வென்று தமிழ்நாடு 2-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. முதல் முறையாக இந்த சாதனையை படைத்துள்ள தமிழ்நாட்டுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்றது. கடந்த மாதம் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு வகையிலான விளையாட்டு பிரிவுகளில் இந்திய மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.மொத்தம் 13 நாட்கள் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் நேற்றுடன் முடிந்தது.

இதில் தமிழகம் 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என மொத்தமாக 98 பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தை மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தை ஹரியானாவும் பிடித்துள்ளன.

இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில், இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு என்றும் பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,சமீபத்திய தேசிய விளையாட்டு, சர்வதேச போட்டிகளில் தமிம்நாடு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் 98 பதக்கங்களை வென்று தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது. வெற்றிகரமாக போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி மற்றும் துறை சார்ந்த அனைவருக்கும் பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனடியே கேலோ விளையாட்டு போட்டிகளில் 2-ம் இடம் பிடித்த தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் தள பதிவில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 -ல் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய திறன்கள், உறுதிப்பாடு, கடின உழைப்பு, சாதுர்யம் ஆகியவற்றின் மூலம் அனைவரையும் பெருமைப்படுத்தி இந்தப் போட்டியை உண்மையிலேயே மறக்க முடியாததாக மாற்றியுள்ளீர்கள். இது விளையாட்டு கலாசாரத்தையும், ஃபிட்இந்தியா நோக்கத்தையும் மென்மேலும் மேம்படுத்தும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்