Logo
Logo

முக்கிய செய்தி:

விளையாட்டு

கோலி, ஜடேஜா, ராகுல், ஸ்ரேயாஷ் விலகல் - இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்

AUTHOR10-02-2024
கோலி, ஜடேஜா, ராகுல், ஸ்ரேயாஷ் விலகல் - இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காயம் காரணமாக ஜடேஜா, ராகுலும், மோசமான ஃபார்ம் காரணமாக ஸ்ரேயாஷ் ஐயரும் அணியில் இடம்பெறவில்லை.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றதையடுத்து, தொடர் சமனில் உள்ளது. வரும் 15-ம் தேதி, ராஜ்கோட்டில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரோகித் சர்மா தலைமையில், பும்ரா, ஜெய்ஸ்வால், கில், ரஜத் படிதார், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரல், மொகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அடங்கிய இளம் இந்திய அணி களம் காணவுள்ளது.

தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நட்சத்திர வீரர் விராட் கோலி பங்கேற்காத நிலையில், எஞ்சிய 3 போட்டிகளிலும் அவர் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளதாகவும், அவரது முடிவை மதிப்பதாகவும், தங்களது முழு ஆதரவை அவருக்கு வழங்குவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஜடேஜா, கே.எல்.ராகுல் உடற்தகுதி காரணமாக எஞ்சிய போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இருவரும் முழு உடற்தகுதி பெற்றால் போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

இங்கிலாந்து அணியைகாட்டிலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இளம் இந்திய அணி சற்று பலவீனமானதாக காணப்பட்டாலும், இதுபோன்ற இளம் இந்திய அணியே ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வசமாக்கியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. காயங்களால் சீனியர்கள் விலகியுள்ள நிலையில், அடுத்த தலைமுறை வீரர்கள் பொறுப்பை உணர்ந்து ஆடும் பட்சத்தில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்பது உறுதி.

அதேநேரம், இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அனுபவம் வாய்ந்த இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாட முயற்சிக்கும் என்பதால், டெஸ்ட் தொடர் உயிர்ப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்