Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

நாளை டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - இன்று விவசாய சங்க முக்கிய தலைவர்கள் கைது

SAMYUKTHA12-02-2024
நாளை டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - இன்று விவசாய சங்க முக்கிய தலைவர்கள் கைது

விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை டெல்லி நோக்கி மெகா பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேரணியில் பங்கேற்க செல்லும் விவசாய சங்க தலைவர்களை, இன்று ஆங்காங்கே போலீசார் கைது செய்து வருகின்றனர்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை இயற்றுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் நாளை டெல்லி நோக்கிய பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த பேரணியில் சுமார் 200 விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் டெல்லி செல்வதை தடை செய்யும்பொருட்டு இன்று, ஆங்காங்கே விவசாயிகள் மற்றும் சங்கத்தின் முக்கிய தலைவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அரியானாவில் 15 மாவட்டங்களில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நேற்று காலை டிராக்டரில்பேரணிக்கு புறப்பட்டனர். கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து சம்யுக்தா கிசான் மோர்ச்சாவிற்கு ஆதரவாக வரும் விவசாயிகள் போபாலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும். ஒருபுறம் மத்திய அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றது. மறுபுறம் அவர்கள் விவசாயிகளை தடுத்து நிறுத்துகிறார்கள். பிறகு அரசுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்தமுடியும். பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையில், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முன்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் அடங்கிய குழு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் இன்று மாலை இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்