Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

”நாட்டுப் பண் பாடவில்லை என சொல்லி ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பது கண்டனத்திற்குரியது” - திருமாவளவன்

LENIN DEVARAJAN12-02-2024
”நாட்டுப் பண் பாடவில்லை என சொல்லி ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பது கண்டனத்திற்குரியது” - திருமாவளவன்

நாட்டுப் பண் பாடவில்லை என சொல்லி வெளிநடப்பு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் கவர்னராக செயல்படவில்லை. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் தொண்டராக தான் வெளிபடுத்திக் கொண்டிருக்கிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் இன்று தொடங்கியது. அப்போது தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி படிக்காமல் புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு, ”நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும். அரசின் உரையில் பல பத்திகள் உள்ளன. உண்மையின் அடிப்படையிலும் தார்மீக அடிப்படையிலும் இந்த உரையுடன் நான் உடன்படவில்ல”, என சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியுள்ளார். ஆளுநரின் இத்தகைய பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக-விசிக இடையே இன்று நடைபெற்ற தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்த பின் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆளுநரின் நடவடிக்கையை திருமாவளவன் கடுமையாக கண்டித்தார். மேலும், செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது,

"இன்று ஆளுநர் நடந்துக்கொண்ட முறை மிகவும் கண்டனத்திற்குரியது. அவர் முன்கூட்டியெ முடிவெடுத்து தமிழக அரசுக்கு நெருக்கடி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வந்திருக்கிறார். நாட்டுப் பண் பாடவில்லை என சொல்லி வெளிநடப்பு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் கவர்னராக செயல்படவில்லை. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் தொண்டராக தான் வெளிபடுத்திக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பொறுப்பில் அவர் இருப்பதற்கு அவர் தகுதியற்றவர். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவதோடு, திமுக அரசு ஆர்.என்.ரவி ஆளுநராக நீடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்”, இவ்வாறு திருமாவளவன் பேசியுள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்