Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு

VASUKI RAVICHANDHRAN12-02-2024
கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு

கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி கடந்த 4-ம் தேதி விபத்தில் சிக்கினார். விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது.

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி கடந்த 4-ம் தேதி விபத்தில் சிக்கினார். விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர் கோபிநாத்துடன் சில நாட்களுக்கு முன்பு இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.5) சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி, சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது.

கார் ஓட்டுநர் தன்ஜினுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதால் தான் இந்த விபத்து நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெற்றி துரைசாமியுடன் பயணித்த அவரது நண்பர் கோபிநாத் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், சம்பவ இடத்திலேயே மீட்கப்பட்டு படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், காரில் பயணித்த வெற்றி துரைசாமி காணாமல் போன நிலையில், கடந்த 8 நாட்களாக அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இமாச்சலப் பிரதேச போலீஸார், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஸ்கூபா டைவிங் வீரர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் பணியின்போது, பாறை இடுக்குகளில் சேகரிக்கப்பட்ட ரத்தக்கறை மற்றும் திசுக்களின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், 9 நாளாக வெற்றி துரைசாமியின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில், ஸ்கூபா டைவிங் வீரர்கள் அவரது உடலைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின், உடல் உடற்கூராய்வுக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வெளியான நிலையில், வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி இமாச்சலப் பிரதேசம் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்