Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

அசோக் சவான் விலகல்; துரோகிகளின் விலகல், புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் – காங்கிரஸ் காட்டம்

PRIYA12-02-2024
அசோக் சவான் விலகல்; துரோகிகளின் விலகல், புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் – 
காங்கிரஸ் காட்டம்

அசோக் சவான் கட்சியில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அவரைக் குறிப்பிடும் விதமாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து துரோகிகள் வெளியேறுவது, அவர்களால் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டவர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவான், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். சபா நாயகர் ராகுல் நர்வேகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்றும் எம்பி பதவிக்கு போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலுக்கு நாட்கள் நெருங்க நெருங்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களான பாபா சித்திக், மிலிந்த் தியோரா ஆகியோர் சமீபத்தில் கட்சியில் இருந்து வெளியேறினர். தற்போது சவானும் வெளியேறி உள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் சவானின் விலகல் பற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சவானின் பெயரை குறிப்பிடாமல் கருத்து தெரிவித்துள்ளர்.

அதில், கட்சியில் நல்ல முறையில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட, சொல்லப்போனால் அவர்கள் தகுதிக்கு மீறி அங்கீகரிக்கப்பட்ட நண்பர் அல்லது உடன் பணியாற்றுபவர் விலகுவது, எப்போதும் வேதனை அளிக்கக் கூடியது தான் என அவர் கூறியுள்ளார்.

பலவீனமானவர்களுக்கு கருத்தியல் அர்ப்பணிப்பு, தனிப்பட்ட நேர்மையைவிட அந்த வாஷிங் மெஷின் (பாஜக) ஈர்ப்பு மிக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர்களின் விலகல், அவர்களால் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்ட பலருக்கு புதிய பரந்த வாய்ப்புக்கான வழிகளை திறந்துவிடும் என்பது அந்த துரோகிகளுக்கு புரிவதில்லை, என கூறியுள்ளார்.

மும்பை ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழலில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றசாட்டில் கடந்த 2010ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து சவான் விலகினார். அவர் கடந்த 2014 முதல் 2019 வரை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்