Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

கோயில் இடத்தில் மண்டபம் கட்டி அறக்காவலர் முறைகேடு - கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

SAMYUKTHA12-02-2024
கோயில் இடத்தில் மண்டபம் கட்டி அறக்காவலர் முறைகேடு - கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ மேத்தா நகரில், சிவன் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் அறங்காவலர் இந்த கோயில் அருகே உள்ள களம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மண்டபம் கட்டி பல லட்ச ரூபாய் வருவாய் ஈட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடமும் வருவாய்த்துறை இடமும் முறையிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள அறங்காவலர் பத்மநாபன் என்பவர் விசாரணைக்கு வரும் அதிகாரிகளிடம் பொதுமக்களிடமும் மண்டபம் கோயிலுக்கு சார்ந்த இடம் என்றும் கோயில் ராஜகோபுரமும் களம் புறம்போக்கு இடத்தில் இருப்பதாகவும், ஆக்கிரமிப்பு அகற்றினால் கோயில் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என பொய்யான தகவலை பரப்பி வருகிறார். எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து புகார் அளித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குறிப்பிடப்பட்டுள்ள இடம் அரசு புறம்போக்கு எனவும் அந்த கட்டிடத்தை அகற்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த ஜனவரி மாதம் இருபதாம் தேதியும் படிவம் 6 வழங்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் வழங்கியும் இதுவரை ஆக்கிரமிப்பு, அகற்றப்படாமல் இருப்பதாக கூறி மீண்டும் இன்று மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் வந்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மீண்டும் மனு கொடுத்து அந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்