Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக - அண்ணாமலை விமர்சனம்

VASUKI RAVICHANDHRAN13-02-2024
மத்திய அரசின் திட்டங்களுக்கு  ஸ்டிக்கர் ஒட்டும் திமுக - அண்ணாமலை விமர்சனம்

தமிழக அரசின் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது, ஆனால், மத்திய அரசு கொடுக்கும் திட்டங்கள் அனைத்துக்கும் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தண்டையார்பேட்டையில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தபின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், சென்னையினுடைய ஆதி குடிமக்கள் வாழும் இடம் குறிப்பாக நம்முடைய மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் வாழக்கூடிய பகுதிகள் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது மிகக் கடுமையாக நம்முடைய தலைவர்கள் எல்லாம் வேலை செய்து உள்ளது பாரதிய ஜனதா கட்சியை வளர்த்துள்ளனர்.பாராளுமன்ற தேர்தலை பொறுத்த வரை வடசென்னை மக்களுக்கு நிறைய செய்யவேண்டும். மக்களுக்கு நிறைய முன்னேற்றங்கள் கொண்டு வரவேண்டும். இன்று சென்னையில் இருக்கக்கூடிய 3 எம்.பிக்களும் அரசியல் குடும்பத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். சாமானிய மனிதர்கள், மக்களுக்கு பணி செய்பவர்கள் இல்லை அந்த நிலை மாறி பாஜக கூட்டணி வெற்றி பெற்று மக்களின் வளர்ச்சிக்காக நிற்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய திமுகவின் தொண்டனின் நிலையை விட சபாநாயகர் மோசமாக இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் சாதி எல்லாம் வந்ததற்கு காரணம் கலைஞர் தான் என்று கூறினார். ஆளுநர் தன்னுடைய கருத்தை சபையில் எடுத்து கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்திருக்கின்றார். சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், நேற்று சபாநாயகர் கட்சி நடுநிலைமையாக அவர் நடக்கவில்லை. ஒரு கட்சியை சார்ந்து திமுகவின் உறுப்பினர் போல் அவர் நடக்கிறார். அதனால் தான் ஆளுநர் எழுந்து சென்றதாக தெரிவித்தார். ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட உரையில் அதிகமாக பொய் இருந்தது, பொய்யை எழுதி ஆளுநர் பேச வேண்டும், அரசை பாராட்ட வேண்டும் என்றால் எப்படி முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

இன்று இந்தியாவில் உலக முதலீட்டாளர்கள் முகவரியாக தமிழக அரசு உள்ளது என்பது முதல் பொய்யாக அமைந்தது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு கிடைத்த தொகை என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகத்திற்கு மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பொறுத்தவரை 6.6 லட்சம் தமிழகம், 33 லட்சம் உத்திரபிரதேசம், 26 லட்சம் குஜராத், 10 லட்சம் கர்நாடகா போன்றவை முதலீடுகளாக பெற்றுள்ளன. எந்த அடிப்படைகள் பார்த்தாலும் கூட தமிழகம் முதலீட்டாளர்கள் உடைய முகவரியாக இல்லை. 2000 முதலீடு செய்வதாக கூறி விளம்பரம் செய்தார்கள். ஆனால் இதுவரை இரண்டு ரூபாய் கூட வரவில்லை. நாங்கள் தமிழகம் முழுவதும் சுற்றி வந்துள்ளோம் அனைத்து இடங்களிலும் தொழிற்சாலை சிப்காட் போன்றவை எப்படி உள்ளது என்பதை பார்த்துள்ளோம். இது போன்று அந்த அறிக்கையில் பல பொய்கள் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

தமிழக அரசின் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது, ஆனால், மத்திய அரசு கொடுக்கும் திட்டங்கள் அனைத்துக்கும் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்று குற்றம் சாட்டினார்.

செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க அவரது தம்பியை ஒரு வாரத்திற்குள் சரணடையச் செய்வார்கள், ஊழல் வழக்கில் கைதான அமைச்சருக்கு மக்கள் வரிப்பணத்தில் 8 மாதமாக சம்பளம் வழங்கப்படும் நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்கும் என்ற எண்ணத்திலும், மக்களின் கோபத்துக்கு ஆளாகி வேறு வழியின்றி ராஜினாமா என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்