Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

தாது மணல் கொள்ளை: தாமாக முன்வந்து இறுதி விசாரணையை தொடங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்...!

VASUKI RAVICHANDHRAN12-02-2024
தாது மணல் கொள்ளை: தாமாக முன்வந்து இறுதி விசாரணையை தொடங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்...!

தாது மணல் கொள்ளை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் இறுதி விசாரணையை தொடங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சட்டவிரோத கடத்தல் விசாரணை அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதாக அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், தாதுமணல் முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேலும் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் அறிக்கையின் அடிப்படையில் இழப்பிட்டு தொகையை வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த வாதத்தின்போது நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வி.சுரேஷ் ஆஜராகி அரசுத் ஆவணங்கள் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளாக தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை மூன்று விரிவான அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த அறிக்கைகளை மத்திய மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தாது மணல் அள்ள விதிக்கப்பட்ட தடை மற்றும் விசாரணை அறிக்கைகள், சட்டவிரோத கடத்தல் என அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்