Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு: பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்

CHENDUR PANDIAN.K13-02-2024
கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு: பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, கடந்த 2001 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி விவகாரத்தில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2022ல் இந்த வழக்கில் அப்துல்லா மீது மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், 86 வயதான பரூக் அப்துல்லா மீது பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தனது உடல்நிலையைக் காரனம் காட்டி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு புதிதாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீ நகரில் உள்ள அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல்வேறு பெயர்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு இந்த நிதி மாற்றப்பட்டதாகவும், அப்படி மாற்றப்பட்டவர்களுக்கும் கிரிக்கெட் சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளை சேர்ர்ந்த முக்கியத் தலைவர்களான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தொடர்ந்து. தற்போது ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ள பரூக் அப்துல்லாவும் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு குறி வைத்து ஆளும் பாஜக அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்