Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

விவசாயிகள் போராட்டத்தில் கண்ணீர் புகை வீச்சு: சுவர் எழுப்பி பஞ்சாப் அரியானா எல்லையை மூடியதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

CHENDUR PANDIAN.K13-02-2024
விவசாயிகள் போராட்டத்தில் கண்ணீர் புகை வீச்சு: சுவர் எழுப்பி பஞ்சாப் அரியானா எல்லையை மூடியதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

டெல்லி நோக்கி வரும் விவசாயிகள் பேரணியை கலைப்பதற்காக டெல்லி எல்லையில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. கான்கிரீட் சுவர் எழுப்பி பஞ்சாப்-அரியானா எல்லைகள் மூடப்பட்டதற்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், லக்கீம்பூா் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி, உலக வா்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுதல், 2020 வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு எனப் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் இன்றுபோராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்த கிசான் மோா்ச்சா, கிசான் மஸ்தூா் மோா்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

விவசாய அமைப்புகளின் தலைவா்கள் பிடிவாதமாக இருந்ததால் மத்திய அரசு உடன் திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் தொடங்கிய பேச்சுவாா்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. இந்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டபடி பஞ்சாபில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடங்கியது

தேசியத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் திரண்டனர்.

பஞ்சாப் விவசாயிகள் அரியானா மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க, இரு மாநில எல்லையில் உள்ள அம்பாலா, ஜிந்த், பதேஹாபாத், குருக்ஷேத்ரம், சிா்சா ஆகிய பகுதிகளின் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு ஆணி வேலிகளை மாநில காவல்துறையினா் ஏற்படுத்தியுள்ளனா்.

டிராக்டா்களில் பேரணியாகச் செல்வதைத் தடுக்கும் விதமாக ஹரியானாவின் 15 மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.மத்திய துணை ராணுவப் படையின் 50 கம்பெனி படைகளுடன் மாநில காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதனிடையே, அம்பாலா அருகே டெல்லியின் ஷம்பு எல்லையில் ஹரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராடும் விவசாயிகளை கலைத்தனர்.

இந்நிலையில், பேரணியாகச் செல்லும் விவசாயிகளை தடுக்கும் விதமாக அரியானா - பஞ்சாப் மாநில எல்லைகளை மூடியதற்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "பஞ்சாப் மக்கள், தாங்கள் எதிரி தேசத்து மக்களாக கருதப்படுவதைப் போன்று உணர்வதாக", அரியானா மற்றும் மத்திய அரசு மீதுவிவசாயிகள் அமைப்பான கீர்த்தி கிஷான் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கான்கிரீட் தடுப்புச் சுவர்கள், இரும்பு ஆணி வேலிகள் மாநில எல்லைகளில் தடுப்பு அரணாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.பாஜக அரசு மகக்ளை பயமுறுத்த பயங்கரமான சூழலை உருவாக்கி வருகிறது, போராட்டக்காரர்களை நாட்டின் எதிரிகளை போல நடத்துகிறது" என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்