Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

காங்கிரசில் இருந்து சவான் விலகல்; தாயை மகன் கைவிட்டு செல்வதை போன்றது – சஞ்சை ராவத்

PRIYA13-02-2024
காங்கிரசில் இருந்து சவான் விலகல்; தாயை மகன் கைவிட்டு செல்வதை போன்றது – சஞ்சை ராவத்

மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவராக திகழ்ந்த அசோக் சவான் கட்சியை விட்டு விலகி இருப்பது, தாயை மகன் கைவிட்டு செல்வதற்கு சமமானது என சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சவானின் விலகல் குறித்து சிவ சேனா (யு.பி.டி) தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் நேற்று மும்பையில் செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது கூறுகையில், “வலிமைமிக்க தலைவராக மகாராஷ்டிராவின் முதல்வராக 1975 முதல் 1977 வரை பதவிவகித்த ஷங்கர்ராவ் சவானின் மகன், காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுகிறார். இது தாயை மகன் கைவிட்டுச் செல்வதைப் போன்றது.‘’, எனக் கூறினார்.

அசோக் சவானின் தந்தையான ஷங்கர்ராவ் சவான், மகாராஷ்டிராவின் முதல்வராக 1975-1977 மற்றும் 1986 – 1988ம் ஆண்டுகளில் பதவிவகித்தார். மேலும் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் இருந்தார். தந்தையைப் பின்பற்றி அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். மகாராஷ்டிராவில் முக்கிய காங்கிரஸ் தலைவரானார். காங்கிரஸ் மற்றும் சவான் குடும்பம் பிரிக்க முடியாதவையாக இருந்தன.

இந்நிலையில் நேற்று திடீரென அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். மேலும், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். முந்தைய நாள் வரை கட்சியின் முக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு இருந்த சவான் விலகியது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இவர் நடவடிக்கைக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சஞ்சய் ராவத் மேலும் கூறுகையில், அவரது குடும்பத்தின் முழு வாழ்க்கையும் காங்கிரசுக்காக இருந்தது என்றும் அவர் தற்போது இருக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் எனறும் கூறினார்.

சவான் மீதான நம்பிக்கையை இழக்காத ராவத், “நாங்கள் அசோக்ராவ் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நேற்று வரை எங்களுடன் இருந்தார். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மராத்வாடாவில் சில தொகுதிகள் பற்றிய அவரது கருத்துக்கள் மிகவும் உறுதியாக இருந்தன. அது அவர் எங்களுடன் தான் இருப்பதைக் காட்டுகிறது. இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”, என்றார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அசோக் சவான், இன்று பாஜகவில் இணைகிறார். இதனை அதிகாரப்பூர்வமாக சவானே அறிவித்துள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்