Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

17வது மக்களவை – குறைவான அமர்வுகள், நிறைவான மசோதாக்கள் நிறைவேற்றம்

PRIYA13-02-2024
17வது மக்களவை – குறைவான அமர்வுகள், நிறைவான மசோதாக்கள் நிறைவேற்றம்

17வது மக்களவை 5 ஆண்டுகளில் மொத்த 274 நாட்கள் நடந்துள்ளன. ஆனால், 5 ஆண்டுளில் 222 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு, அவசரகதியில் மசோதாக்களை நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அமையப்பெற்ற நாட்டின் 17வது மக்களவை நிறைவு பெற்றது. பி.ஆர்.எஸ் சட்டமன்ற ஆராய்ச்சி அமைப்பு, ஜுன் 2019 முதல் பிப்ரவரி 2024 வரையில் நாடாளுமன்றம் இயங்கியது பற்றிய ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இந்த மக்களவையில் 5 ஆண்டுகளில் 222 சட்டங்கள் நிறைவேறி இருப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். மக்களவையில் 202 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் 11 மசோதாக்களை அரசு பல்வேறு காரணங்களுக்காக திரும்பப் பெற்றது. பி.ஆர்.எஸ் சட்டமன்ற ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளின் படி, நிதி மற்றும் ஒதுக்கீட்டு மசோதாக்கள் தவிர்த்து 179 மசோதாக்கள் நிறைவேறி உள்ளன. இவற்றில் 35 சதவீதம் மசோதாக்கள் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இது போல் மாநிலங்களவையிலும் 34 சதவீத மசோதாக்கள் குறுகிய நேர விவாதத்துக்குப் பிறகு நிறைவேறி உள்ளன. 58 சதவீத மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 2 வாரங்களில் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

17வது மக்களவை குறைவான வேலை நாட்களே இயங்கி உள்ளது. பி.ஆர்.எஸ் அமைப்பின் அறிக்கையின் படி, இதற்கு முன்னர் 4 மக்களவைகள் குறைவான நாட்கள் இயங்கி உள்ளன. ஆனால் அவை அனைத்தும் இடையிலேயே கலைக்கப்பட்டவை. மக்களவையின் ஆண்டு சராசரி இயங்கிய நாட்கள் 55 ஆக குறைந்துள்ளது. நாட்டின் முதல் மக்களவையின் ஆண்டு சராசரி, 135 நாட்களாக இருந்தது. கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா காரணமாக நாடாளுமன்றம் குறைவான நாட்களே இயங்கியது. இதனால் இந்த மக்களவையின் வேலை நாட்கள் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக நாடாளுமன்றம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பு கூட்டத் தொடர் நடந்தது. அப்போது, பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது.

ஆனால், டிசம்பர் 13ம் தேதி, நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறல் சம்பவம் அரங்கேறியது. நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் 22வது நினைவு தினத்திலேயே இந்த சம்பவமும் நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிறது. புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அமைப்பை கேள்விக்குள்ளாகியது. இது பற்றி கேள்வி எழுப்பிய 146 எதிர்க்கட்சி எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து மோடி அரசு வரலாற்றுச் சாதனை படைத்தது. மோடி தலைமையிலான இந்த அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சரத்து 370ஐ 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. அதற்கு முந்தைய மாதம் முத்தலாக் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வேளாண் துறையின் முன்னேற்றத்துக்காக எனக் கூறி மத்திய அரசு கொண்டுவந்த 3 மசோதாக்கள் பெரும் எதிர்ப்பு உள்ளாகின. விவசாயிகளின் நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் அரசு அவற்றை திரும்பப் பெற்றன.

இந்த மக்களவையில் 16 சதவீத மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. இது முந்தைய மக்களவையில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை விட மிகவும் குறைவு என பி.அர். எஸ் ஆய்வு தெரிவிக்கிறது.

இது வரை இல்லாத அளவாக 729 தனிநபர் மசோதாக்களும், தீர்மானங்களும் 17வது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்