Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

மக்களவை தேர்தல் வெற்றியே சிறந்த பதிலடியாக இருக்கும் – மஹுவா மொய்த்ரா

PRIYA02-04-2024
மக்களவை தேர்தல் வெற்றியே சிறந்த பதிலடியாக இருக்கும் – மஹுவா மொய்த்ரா

மக்களவைத் தேர்தலில் தனது தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவதே, எம்பி பதவி பறிப்புக்கும் நன்மதிப்பை கெடுக்க செய்த சதிக்கெல்லாம் தரும் சிறந்த பதிலடியாக இருக்கும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

திரிணாமூல் முன்னாள் எம்பியான மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக பணம் பெற்றதாகவும், இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டில் அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டின் காரணமாக இவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் சதி எனவும் பாஜகவின் அரசியல் செயல்திட்டம் எனவும் மொய்த்ரா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தின் கிரிஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியில் மீண்டும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மொய்த்ரா பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது;-

எனது வெற்றியைப் பற்றி எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எவ்வளவு வித்தியாசத்தில் என்பது தான் சந்தேகம். அது ஜூன் 4ம் தேதி முடிவாகி விடும். நான் இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக மக்களிடையே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன். அதற்கு முன்னர் எம்எல்ஏவாக இருந்துள்ளேன். அதனால், உறுதியான இணைப்பு எங்களிடையே உள்ளது. உண்மையைச் சொன்னால், இங்க தேர்தல் பரபரப்பே இல்லை.

இந்திய அரசியல்சாசன ஜனநாயகத்துக்கு பாஜக ஒரு சாவு மணி என்பதை நாடாளுமன்றத்தில் நான் முதன் முறை பேசியதிலிருந்தே சொல்லிக் கொண்டு இருக்கிறேன். ஆனால், இது போன்ற பாசிச குண்டர்களால் அழிக்க கூடியதல்ல நமது ஆகச்சிறந்த இந்திய தேசம். இது எனது கர்மபூமி மற்றும் எனது தர்மபூமி. மக்கள் என்னை 100 சதவீதம் ஆதரிப்பார்கள். நான் பாஜகவுக்கு எதிராக போராடுகிறேன். பாஜகவில் இருந்து யார் போட்டியிடுகிறார் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் மீண்டும் பதவிக்கு வருவேன், பாஜகவுக்கு முன்பு வெற்றி கீதம் பாடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்