Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

"அடுத்த ஆட்சியில், ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை" - பிரதமர் மோடி உறுதி

CHENDUR PANDIAN.K02-04-2024
"அடுத்த ஆட்சியில், ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை" - பிரதமர் மோடி  உறுதி

நடைபெற இருக்கும் தேர்தல் ஊழலுக்கும் நேர்மைக்கும் இடையே நடைபெறும் போர். இதில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். அப்போது ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் குமாவோன் பகுதியில் உள்ள ருத்ராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

"நடைபெற இருக்கும் இந்த மக்களவைத் தேர்தல் நேர்மைக்கும் ஊழலுக்கும் எதிரே நடைபெறும் போராகும். அதேபோல் வெளிப்படைத் தன்மைக்கும் வாரிசு அரசியலுக்கும் இடையே நடைபெறும் போராட்டமாகும் இது.

ஒரு பக்கம் நாங்கள் நேர்மையான மற்றும் வெளிப்படை தன்மையானவர்கள். மறுபக்கம் ஊழல்வாதிகளும் வாரிசு அரசியல்வாதிகளும் உள்ளனர். நாங்கள் ஊழலை ஒழிப்போம் என்கிறோம். அவர்கள் ஊழலை காப்பாற்றுவோம் என்கிறார்கள்.

அவர்களின் அவமானங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மோடி ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது நிச்சயம். இந்த ஆட்சி காலத்தில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழல் மக்களை மிகவும் பாதிக்கிறது. அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இது உங்களுக்கு மோடி வழங்கும் உத்தரவாதம். காங்கிரஸ் கட்சி மக்களை தூண்டிவிட்டு ஸ்திரமின்மைக்கும் அராஜகத்துக்கும் நாட்டை தள்ளுகிறது. நாட்டை துண்டாட நினைப்பவர்களை தண்டிக்க வேண்டும்.

மூன்றாவது முறையாக மோடி ஆட்சியைத் தேர்ந்தெடுத்தால் இந்த நாடு தீப்பற்றி எரியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா? இதை அனுமதிப்பீர்களா? இதுதான் ஜனநாயக மொழியா?. காங்கிரஸ் இப்போது மக்களை தூண்டி விடுகிறது. நாட்டை துண்டாட நினைப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?".

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் பேரணியில் பேசிய ராகுல் காந்தி இந்தத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டத்தை சட்டத்தை மாற்றி விடுவார்கள் என்றும் நாடு நெருப்பாகிவிடுமீ என்று கூறி இருந்தது நினைவு கூரத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்