Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

”நாங்கள் 23 இடங்களில் போட்டியிடுகிறோம், பயம் இல்லை” – நிர்மலா சீதாராமன்

LENIN DEVARAJAN02-04-2024
”நாங்கள் 23 இடங்களில் போட்டியிடுகிறோம், பயம் இல்லை” – நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட பயம் இல்லை. ஆகையால் தான் 23 இடங்களில் எங்களது(பாஜக) சின்னத்தில் போட்டியிட தயாராகி உள்ளோம் என நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ’நான் முன்னேற்றமடைந்த பாரதத்தின் தூதர்’ (விக்ஷித் பாரத் அம்பாசிடர்) என்ற திட்டம் குறித்து மாணவர்கள் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

”தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் பிரச்சாரம் பாஜக சார்பில் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒரு நாட்டு பாதுகாப்பு விஷயத்திற்கு தேவையான, சம்பந்தப்பட்ட விஷயத்திற்கும் தேர்தல் தான் தேவை என்று இல்லை. கச்சத்தீவை பற்றி இப்பொழுது பேசுவது ஏனென்று கேள்வி எழுப்பலாம்.

காங்கிரஸ் தேசிய கட்சியாக அப்பொழுது இருந்தது. அவர்கள் ஏன் அப்பொழுது பதில் சொல்லவில்லை. இந்திரா காந்தி இறக்கும்பொழுது சிறிய கல் பாறை கொடுத்தால் பிரச்சனை இல்லை என்றார்கள். அப்பொழுது கருணாநிதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாரா?.

இப்படி தேசிய கட்சியாக உள்ள காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரான செயல்களை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் என்று இல்லை, நாட்டினுடைய சுதந்திரத்திற்காக எப்பொழுது வேண்டுமானாலும் பேசலாம்.

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் கட்டமைத்துக் கொள்ளட்டும். எங்களது கட்சி எங்களுக்கு என்ன கூறுகிறது அதை நாங்கள் செய்வோம்” ,இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

தேர்தல்

”தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட பயம் இல்லை. ஆகையால் தான் 23 இடங்களில் எங்களது சின்னத்தில் போட்டியிட தயாராகி உள்ளோம்” என்றார் நிர்மலா சீதாராமன்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்