Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

பாஜவின் வீட்டு வேட்டை நாயாக மாறிய ஈ.டி, ஐ.டி - கமல் கடும் தாக்கு

SAMYUKTHA02-04-2024
பாஜவின் வீட்டு வேட்டை நாயாக மாறிய ஈ.டி, ஐ.டி - கமல் கடும் தாக்கு

திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: நான் தற்போது இந்த இடத்திற்கு வந்து நிற்க வேண்டிய அவசியமும் காரணமும் என்னவென்றால் தேசம், தேசபக்தி. தேசபக்தி என்பது பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியது. தேசம் என்பது பாரபட்சம் இல்லாமல் அனைத்து மொழிகளையும் பாரபட்சமில்லாமல் பேசி மகிழ்ந்திருப்பது. இந்தியாவில் மதக்கலவரங்கள் இல்லாத மாநிலம் என்றால் அது தமிழகம் மட்டும் தான். அதிலும் திருச்சி மாநகரில் இதுவரை அப்படிப்பட்ட எந்த ஒரு மதக்கலவரங்களும் இதுவரை நடந்ததில்லை. இதுவே ஒரு நல்ல அரசு. நல்ல நிர்வாகம். நல்ல அரசியல் நடைபெறுகிறது என்பதற்கான அடையாளம். நான் இங்கு வந்து நிற்பது சீட்டுக்காக அல்ல நாட்டுக்காக என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை விட வேறு யார் இந்த தேசிய நீரோட்டத்தில் தடம் பதித்து விட முடியும். எனவே நான் அந்த பாசிச பாஜவினருக்கு சொல்வது நீங்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க பழகுங்கள். பல நேரங்களில் ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்ற அமைப்புகளை வேட்டை நாயை போல பயன்படுத்துகிறது. நான் ஒழுங்காக வரி கட்டுகிறவன். இதுவரை அவர்கள் எனக்காக வேலை பார்த்தார்கள். ஆனால் இன்று அவர்களுக்கு வீட்டு வேட்டை நாய்களாக மாறிவிட்டார்கள். அதேபோல் முதல்வர்கள் கைது என்பது பாஜ நினைக்கிறது, நாம் முதல்வரை கைது செய்து விட்டோம் என்று அந்த முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் வாக்காளர்களும், பொதுமக்களும் ஆகிய நீங்கள் தான். அப்படி என்றால் அவர்கள் 100 கோடி மக்களை எதிர்க்கிறார்கள். கைது செய்ய துடிக்கிறார்கள் என்று தான் அர்த்தம். பாஜ சுடும் வடையை திண்றால் ஒருபோதும் பசி ஆறாது. அதற்கு காரணம் அவர்கள் வாயால் மட்டுமே வடை சுட்டு வருகின்றனர். உலக அரங்கில் இருக்கக்கூடிய நாடுகளில் அரசியலும், மதமும் கலந்த நாடு ஒருபோதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்