Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

10 ஆண்டு பிரதமர் மோடி யாருக்கு பேன் பார்த்தார்? - கச்சத்தீவு விவகாரத்தில் முத்தரசன் கேள்வி

SAMYUKTHA02-04-2024
10 ஆண்டு பிரதமர் மோடி யாருக்கு பேன் பார்த்தார்? - கச்சத்தீவு விவகாரத்தில் முத்தரசன் கேள்வி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன் இன்று திறந்த வேனில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்கள், இனி இந்த நாட்டில் வாழமுடியுமா என்ற அச்சத்தோடு வாழ வேண்டிய பரிதாபம் உள்ளது. அதேபோல் சிறு, குறு தொழில் நடத்துபவர்கள், வணிகர்கள் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழில்களை கைவிட வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்று குறிப்பிடுகிறார்கள். விவசாயிகள் நிலை சொல்ல வேண்டியதில்லை. இன்றுவரை பாஜவை விமர்சனம் செய்து பேச மாட்டேன் என்கிறார் எடப்பாடி. அதனால் தான் கள்ள கூட்டணி என்று குறிப்பிடுகிறோம். தேர்தல் நெருங்க நெருங்க நரேந்திர மோடிக்கு ஜுரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடி சட்டப்பூர்வமாக கச்சத்தீவை மீட்டிருக்கலாம். ஆனால் அவர் மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் திமுக இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து விட்டதாக கூறி பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார். இந்த 10 ஆண்டு காலம் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார் என தெரியவில்லை. இவ்வாறு முத்தரசன் பேசினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்