Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

பாஜ அலுவலகம் முன் கூட்டணி கட்சியினர் அடிதடி

SAMYUKTHA02-04-2024
பாஜ அலுவலகம் முன் கூட்டணி கட்சியினர் அடிதடி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே.) இடம்பெற்றுள்ளது. இந்த கட்சி தமிழகத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. புதுவையில் போட்டியிடும் தேஜ கூட்டணி கட்சி வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு இந்திய ஜனநாயக கட்சியினர் ஆதரவு தொிவித்துள்ளனர். அக்கட்சியின் மாநில தலைவரான அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் இன்று காலை பாஜக அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது பாஜ அலுவலக வாசலில் பிரசார வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் இந்திய ஜனநாய கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைப்பாளரான சத்தியவேல் படம் ஒட்டப்பட்டிருந்தது. அருகில் சத்தியவேல் நின்று கொண்டிருந்த நிலையில், இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள், ‘நாங்கள் தான் ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகிகள். நீ எப்படி கட்சியின் பெயரை பயன்படுத்தலாம்’ எனக்கூறி பிரசார வாகனத்தில் இருந்த பேனரை கிழித்தனர். இதை தடுக்க வந்த சத்தியவேலை தாக்கினர். இதையடுத்து சத்தியவேல் அந்த வாகனத்தை அங்கிருந்து எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றனர். பாஜ அலுவலகம் முன்பு கூட்டணி கட்சியினர் திடீரென மோதலில் ஏற்பட்டதால் புதுவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்