Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ராகுலுக்கு எதிராக களமிறங்கும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் – வயநாடு தொகுதியில் பரபரப்பு

SAMYUKTHA03-04-2024
ராகுலுக்கு எதிராக களமிறங்கும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் – வயநாடு தொகுதியில் பரபரப்பு

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் கூட்டணி அமைத்து மாநிலங்களில் தீவிரமாக பிரச்சாரத்த்ல் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. வரும் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராக வருவார். ஹாட்ரிக் சாதனை படைப்பார் என பேசி வருகின்றனர். அதே சமயத்தில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி, பாஜகவை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதையொட்டி, கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் 29ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனாலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. காரணம் தற்போது அந்த தொகுதியில் எம்பியாக உள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாஜகவின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார். இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். தற்போதைய வயநாடு எம்பி ராகுல்காந்திக்கு எதிராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்