Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஊழலில் பினாராயி விஜயன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில்லை – பிரியங்கா காந்தி பேச்சு

PRIYA25-04-2024
ஊழலில் பினாராயி விஜயன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில்லை – பிரியங்கா காந்தி பேச்சு

கேரள முதல்வர் பினாராயி விஜயனின் பெயர் பல ஊழல்களில் அடிபட்டாலும் அவருக்கு எதிராக மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசி உள்ளார்.

தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இக்கட்சிகள் எதிர்துருவங்களாக தேர்தலில் போட்டியிடுகின்றன. பிரச்சாரத்தின் போது பாரபட்சமின்றி சாடி வருகின்றன. கேரள முதல்வர் பினாராயி விஜயன், வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை பல விசயங்களில் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடியும் தருவாயில் கேரளாவின் வயநாட்டில் பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தி, பினாராயி விஜயனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அப்போது கூறுகையில், “கேரளாவின் முதல்வர் கூட ராகுல் காந்தியைத் தான் தாக்கிப் பேசுகிறார். அவர் பாஜவை தாக்கிப் பேசவில்லை. எப்போது ஒரு மனிதன் சரியான விசயத்துக்காக போராடுகிறானோ, அப்போது அனைத்து தவறான சக்திகளும் அவனுக்கு எதிராக ஒன்று கூடி விடும். பினாராயி விஜயனின் பெயர் பல ஊழல்களில் அடிபட்டாலும் அவருக்கு எதிராக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.”, என்றார்.

கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் 2 மாநிலங்களின் முதல்வர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போது, பினாராயி விஜயனை மட்டும் பாஜக விட்டு வைத்துள்ளது ஆச்சரியமாக இருப்பதாகக் கூறினார்.

கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை இரண்டாம் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலையோடு பரபரப்பான தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்