Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

"பா.ஜ.க‌ தலைவர்களின் பேச்சில் தோல்வி பயம் தெரிகிறது"என்கிறார், அகிலேஷ் யாதவ்

CHENDUR PANDIAN.K24-04-2024
"பா.ஜ.க‌ தலைவர்களின் பேச்சில் தோல்வி பயம் தெரிகிறது"என்கிறார், அகிலேஷ் யாதவ்

லக்னோ

பாஜக தலைவா்கள் பேச்சில் தோல்வி பயம் தெரிகிறது என்று சமாஜ்வாதி கட்சி தலைவா் அகிலேஷ் யாதவ் கூறியுனார்.

நாட்டின் வளங்களை முஸ்லிம்களுக்கு பிரித்தளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரத்தில் பேசிய நிலையில் அகிலேஷ் யாதவ் இவ்வாறு கூறி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முதல் கட்ட தோ்தல் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் வடமாநிலங்களில் உச்சத்தில் உள்ளது. , உத்தர பிரதேசத்தின் அலிகா், ஹாத்ராஸில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-

"முதல்கட்ட தோ்தல் முடிந்த நிலையில், தோ்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்ற கலக்கம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. பாஜக தலைவா்களின் பேச்சில் தோல்விபயம் தெரியத் தொடங்கிவிட்டது.

டெல்லியில் இருப்பவரும் (பிரதமா் மோடி) லக்னோவில் இருப்பவரும் (உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்) எப்படிப் பேசுகிறாா்கள் என்பதை மக்கள் நன்றாக கவனிக்க வேண்டும். ஆட்சியை இழக்கப் போகிறோம் என்ற விரக்தி அவா்களை சூழ்ந்துள்ளது.

தோ்தலுக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும். ஏழைகளுக்கு ரேஷன் பொருள்கள் மட்டுமல்லாது சரிவிகித சத்துகள் நிறைந்த உணவுப் பொருள்களும் இலவசமாக வழங்கப்படும். வேளாண் கடன்கள் ரத்து செய்யப்படும்.

மக்களிடையே வெறுப்புணா்வை ஏற்படுத்தி தோ்தலில் வெல்ல பாஜக முயலுகிறது. இதனை நாம் கூட்டாக முறியடிக்க வேண்டும். பொய்யும் புரட்டும் பாஜகவின் சொத்தாக மாறிவிட்டது. ஊழல்வாதிகளும் கிரிமினல் குற்றவாளிகளும் பாஜகவில் நிரம்பியுள்ளனா்.

அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பாஜகவினா் பேசி வருகின்றனா். அவா்கள் ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதையே இது காட்டுகிறது' என்றாா்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்