Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

பாஜக தலைவர்கள் பேசுவது அனைத்தும் குப்பை – ப.சிதம்பரம் பதிலடி

PRIYA25-04-2024
பாஜக தலைவர்கள் பேசுவது அனைத்தும் குப்பை – ப.சிதம்பரம் பதிலடி

சொத்துக்கள் மறுபகிர்வு பற்றி மோடி உள்பட பாஜக தலைவர்கள் பேசிய அனைத்தும் குப்பை என்றும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் எந்த இடத்திலும் சொத்துக்கள் மறுபகிர்வு செய்யப்படும் என்று குறிப்பிடப்படவில்லை என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி பாஜக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை பறித்து விடுவார்கள், பெண்களின் தாலியைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள் அதையும் எடுத்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்வர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் நேற்று என்டிடிவி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராக இருந்தவர் ப. சிதம்பரம். அவர் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார்.

பேட்டியில் அவர் கூறியதாவது:-

கடந்த 3-4 நாட்களாக பாஜக பேசி வருபவை, குறிப்பாக பிரதமர் மோடி கூறிய கருத்துக்கள் அனைத்தும் குப்பை. 45 பக்கங்கள் இருக்கும் தேர்தல் அறிக்கையில் எங்கேனும் ‘மறுபகிர்வு‘ என்ற வார்த்தை இருப்பதை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம். “சொத்துக்கள் மறுபகிர்வு” என்ற சொல் எங்காவது இருப்பதை எனக்கு காட்டுங்கள். பாஜகவால் நியமிக்கப்பட்ட பேயால், கண்ணுக்குத் தெரியாத மை கொண்டு எழுதப்பட்ட தேர்தல் அறிக்கையை அவர்கள் படித்திருக்க வேண்டும். எங்கள் தேர்தல் அறிக்கையில் அப்படி எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சி, எஸ்.சி., எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டில் இருந்து பறித்து இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப் போவதாக பிரதமர் கூறியிருப்பது பற்றி சிதம்பரத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “தேர்தல் அறிக்கையில் அந்த வாக்குறுதி எங்கு இருக்கிறது? கடந்த 4 நாட்களாக பாஜக தலைவர்கள் பேசும் அனைத்தும் கற்பனையே. இது தேர்தல் அறிக்கையில் எங்கு இருக்கிறது என்று அவர்கள் எனக்கு காட்டியாக வேண்டும். நான் பொது வெளியில் அவர்களுக்கு சவால் விடுகிறேன். ”, என்றார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்