Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

மாட்டு வண்டி பந்தயம் - டிஜிபி சுற்றறிக்கை

ESWAR25-04-2024
மாட்டு வண்டி பந்தயம் - டிஜிபி சுற்றறிக்கை

மாட்டு வண்டி பந்தயம் நடத்துவது தொடர்பாக டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கையில் சில விதிகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில், உள்துறை செயலரும், டிஜிபியும் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கண்ணன் தாக்கல் செய்த மனுவில், மாட்டுவண்டி பந்தயங்களை நடத்துவது தொடர்பாக விதிகளை உருவாக்க தமிழக காவல்துறை தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தக்கூடாது என்றும், 5 கிலோ மீட்டருக்கு உள்ளாக உள்ளூர் பகுதியில் பந்தயம் நடத்திக் கொள்ள வேண்டும் என்றும் விதியில் குறிப்பிட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, தமிழகத்தில் எந்த கிராமத்தில் மண் சாலை ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு நேராக உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சில விதிகள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்பதால், தமிழக உள்துறை செயலரும், தமிழக காவல்துறை தலைவரும் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்