Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

மோடி பேரணியில் பள்ளிக் குழந்தைகள் - விசாரணை ஒத்திவைப்பு

ESWAR25-04-2024
மோடி பேரணியில் பள்ளிக் குழந்தைகள்  - விசாரணை ஒத்திவைப்பு

கோவையில் பிரதமர் மோடியின் பேரணியில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்தது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை, ஜூன் மாதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கோவையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற பிரதமர் மோடியின் சாலைப் பேரணியில், பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்ததாக தனியார் பள்ளி மீது சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கின் விசாரணைக்கு தடை கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களில், பிரதமர் மோடியை வரவேற்பதற்காக, 22 மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற்றே, அவர்களை பேரணிக்கு அழைத்துச் சென்றதாகவும், மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்