Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

பாஜக-காங். தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ESWAR25-04-2024
பாஜக-காங். தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராகக் காங்கிரசும், ராகுலுக்கு எதிராக பாஜகவும் தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மீது விளக்கம் அளிக்க வலியுறுத்தி பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏப்ரல் 29ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் நடவடிக்கைகளுக்கு முதன்மையான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம்

தேசிய கட்சிகள் என்ற அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில் அதிகபட்ச தரத்தை நிர்ணயிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் பன்சாரா பகுதியில் பிரதமர் மோடி சிறுபான்மையினர் குறித்து பேசியது மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயல்வதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகாரளித்திருந்தன.

அதேபோல பிரதமர் மோடி ஒரே மொழியைக் கொண்டுவர நினைப்பதாகவும், அவர் தமிழ் மொழிக்கு எதிராக இருக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டிய நிலையில், ராகுல் காந்தி மொழியின் அடிப்படையில் மக்களிடம் பிளவு ஏற்படுத்த முயல்வதாக பாஜக புகாரளித்தது.

மேலும் பல்வேறு விவகாரங்களில் ராகுல் காந்தியின் மீது பாஜக புகார் அளித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் இந்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்