Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

எதிர்மனுதாரர் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு - அண்ணாமலை தொடர்ந்த வழக்கு

SAMYUKTHA29-04-2024
எதிர்மனுதாரர் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு - அண்ணாமலை தொடர்ந்த வழக்கு

அண்ணாமலை தொடர்ந்த வழக்கில் எதிர்மனுதாரர் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ அமைப்புதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பேட்டியளித்திருந்தார். இதையடுத்து இரு மதத்தவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக அண்ணாமலை மீது சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு நேரில் ஆஜராக அண்ணாமலைக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு எதிராகவும், தனது மீதான புகார் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அண்ணாமலை மீதான புகார் மனுவை ரத்து செய்ய மறுத்ததோடு, மனு மீதான வழக்கை சட்டத்திற்குட்பட்டு சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அண்ணாமலை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், ‘நீதிமன்ற சம்மன் மற்றும் விசாரணை ஆகியவைக்கு தடை விதிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, சேலம் நீதிமன்றம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்திருந்தது. இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் மனுதாரர் பியூஷ் மனுஷ் ஆறு வாரத்தில் பதிலளிக்க வேண்டும். அதற்கு அண்ணாமலை தரப்பில் அடுத்த ஆறு வாரத்திற்குள் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்