Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

‘ஜம்முவில் மக்கள் கொடுமைப்படுத்தி கொலை’: கேரவேன் பத்திரிகையின் செய்தியை நீக்க மத்திய அரசு உத்தரவு

PRITHIVIRAJ13-02-2024
‘ஜம்முவில் மக்கள் கொடுமைப்படுத்தி கொலை’: கேரவேன் பத்திரிகையின் செய்தியை நீக்க மத்திய அரசு உத்தரவு

ஜம்முவில் உள்ள மக்களை கொடுமைப்படுத்தி, கொலை செய்கிறது இந்திய ராணுவம் என்று கேரவேன் மேகஜின் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையை நீக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தகவலை டெல்லியைச் சேர்ந்த கேரவேன் மேகஜின் பத்திரிகை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ளது. ஆனால், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்துள்ளது. “மோடியின் ஆட்சியில் ராணுவம்” என்ற தலைப்பில் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

“ஸ்கீரிம்ஸ் ப்ரம் தி ஆர்மி போஸ்ட்: தி இந்தியன் ஆர்மிஸ் டார்ச்சர் அன்ட் மர்டர் ஆப் சிவிலியன்ஸ் இன் எ ரெஸ்டிவ் ஜம்மு” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ஜதிந்தர் கவுர் துர் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

பூஞ்ச், ரஜோரி ஆகிய மாவட்டங்களில் ராணுவம் அதிகமாகக் குவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ராணுவத்தின் நடவடிக்கைகளை பத்திரிகையாளர் எழுதியுள்ளார்.

அந்த கட்டுரையில் பத்திரிகையாளர் கூறுகையில் “ சில நேரங்களில் ராணுவத்தினர் மக்களைச் செய்யும் சித்ரவதைகள், சில நேரங்களில் தீவிரவாதத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகப்பட்டால் கொலைகள் கூடநடக்கும்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தப் பகுதியில் உளவுத்துறைக்கு தகவல் அளிக்கும் ஒருவரின் குடும்பத்தாரின் பேட்டி இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பேட்டி 2023, டிசம்பர் 22ம் தேதி பூஞ்ச் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப்பின் எடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 4 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இதில் உளவுத்துறைக்கு தகவல் அளிக்கும் ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரை சடலமாக ராணுவத்தினர் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபர் உயிரிழந்ததற்கு இழப்பீடாக ராணுவம் தரப்பில் ரத்தக்கறை படிந்த பணம் வழங்கப்பட்டது என்று பத்திரிகையாளர் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டுரை தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு பேச தி இந்து(ஆங்கிலம்)நாளேடு சார்பில் முயன்றும் பதில் அளிக்கவில்லை.

தி கேரவேன் பத்திரிகை தனது கட்டுரையை நீக்கக் கோரி அரசிடம் இருந்து உத்தரவுகள் வருவது முதல்முறை அல்ல. கடந்த 2011ம் ஆண்டு ஐஐபிஎம் நிறுவனர் ஆரிந்தம் சவுத்ரிக்கு எதிராக வெளியிட்ட கட்டுரையை நீக்கக் கோரியும், இழப்பீடு கேட்டும் அசாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஆனால், இந்த வழக்கில் தி கேரவேன் பத்திரிகை வென்றதையடுத்து, அந்தக் கட்டுரை 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்தது. ஜிஎஸ்டி மோசடி வழக்கில் சவுத்ரியும் 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

2014ம் ஆண்டு சுவாமி அசீமானந்தா குறித்து நேர்காணல் எடுத்து தி கேரவேன் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த அசீமானாந்தா, 2007ம் ஆண்டு சம்ஜாஹுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைக்க மூளையாகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, குற்றப்பத்திரிகையிலும் சேர்க்கப்பட்டவர்.

இந்த நேர்காணலில் அசீமானந்தா ரயில் குண்டுவெடிப்பில் தனது பங்களிப்பை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

சிறையில் அசீமானந்தாவின் ஆடியோ, நேர்காணல் ஆகியவை பின்னர் பத்திரிகையால் வெளியிடப்பட்டது. இந்த வழக்கில் இருந்து 2019ல் அசீமானந்தாவை தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்