Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

‘கோயபெல்ஸ் பிரசாரம் மூலம் பிரதமர் மோடி ஈர்க்கப்பட்டுள்ளார்’: ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்

PRITHIVIRAJ29-04-2024
‘கோயபெல்ஸ் பிரசாரம் மூலம் பிரதமர் மோடி ஈர்க்கப்பட்டுள்ளார்’: ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் நியாயப் பத்ரா குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, நாசி பரப்புரை அமைச்சர் ஜோஸப் கோயபெல்ஸிடம் இருந்து ஈர்க்கப்பட்டு பிரதமர் மோடி பேசுகிறார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 19ம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் 5 கட்டத் தேர்தல் நடக்க வேண்டியுள்ளது. ஜூன் 1ம் தேதி இறுதிக் கட்டத் தேர்தலும் ஜூன 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

l3i790fg_pm-modi_625x300_28_April_24.webp

கடந்த இரு கட்டத் தேர்தலிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. பிரதமர் மோடி தோல்வி பயத்தில் இருக்கிறார், அதனால்தான் உச்சபட்சமாக மதவாதக் கருத்துக்களைப் பேசுகிறார்,

எதிர்க்கட்சிகள் மீது விசாரணை அமைப்புகளை ஏவி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பிரதமர் மோடி ஒவ்வொரு தேர்தல் பிரசாரத்திலும் பாஜக செய்யும் எதிர்காலத் திட்டங்கள், செய்த திட்டங்கள் குறித்து பேசுவதற்குப் பதிலாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்தும், குறைகூறியும் பேசி வருகிறார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர், பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர் நரேந்திர மோடி அவரின் முதுகலை அரசியல் அறிவியல் பட்டப்படிப்பில் ஜெர்மனியில் ஹிட்லர் அமைச்சரவையில் பிரசார அமைச்சராக இருந்த ஜோஸப் கோயபெல்ஸ் பிரசாராம் குறித்து அதன் மதிப்பு குறித்து அறிந்துள்ளார். அதனால்தான் கோயபெல்ஸிடம் இருந்து ஈர்ப்பைப் பெற்று மோடி பிரச்சாரம் செய்து வருகிறார்.

AICC-Jairam-Ramesh-5_1702817239115_1704947509329.avif

நீங்கள் ஒரு பெரிய பொய்யை போதுமான அளவு கூறிவிட்டுஅதை பொய்யை தொடர்ந்த கூறிக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் மக்கள் அந்த பொய்யை உண்மை என நம்பிவிடுவார்கள்.

இதுதான் கோயபெல்ஸ் பிரச்சாரத்தின் உத்தியாகும். ஆங்கிலத்திலும் உள்ள பிரபலமான தத்துவம் என்னவெனில் நீங்கள் ஒரு பொய்யை கூறிவிட்டால் தொடர்ந்து அதையே இறுகப்பிடித்துக்கொள்ளுங்கள்.

சேனல் ஒன்றுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் அளித்த பேட்டியில், காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி குறித்து அப்பட்டமாக, வெளிப்படையாக, வெட்கமின்றி பொய்களைக் கூறுகிறார்.

மோடியின் நோக்கம் என்பது எப்போதுமே பொய் வாழ்க என்பதுதான். உண்மையை ஒவ்வொரு முறையும் பலிகடாவாக்குவதுதான்” எனச் சாடியுள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்