Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக சரத் பவார் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

PRITHIVIRAJ13-02-2024
தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக சரத் பவார் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் உண்மையானது என அறிவித்து, கடிகாரம் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் தலைவர் சரத் பவார். மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மகாவிகாஸ் அகாதி கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தது. ஆனால், சிவசேனா கட்சி்க்குள் ஏற்பட்ட பிளவால், ஏக்நாத் ஷிண்டே தனி அணியாகச் செயல்பட்டதால், மகாவிகாஸ் அகாதி கூட்டணி அ ரசு கவிழ்ந்தது.

இதையடுத்து, சிவசேனா கட்சி இரு பிரிவுகளாக பிரிந்தது. ஏக்நாத் ஷிண்டே தரப்பும், உத்தவ் தாக்கரே தரப்பும் தனித்தனியாக செயல்பட்டனர்.

Sharad Pawar 1.jpg

இதில் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் 40 எம்எல்ஏக்கள், அதிகமான எம்.பி.க்கள் இருந்ததால், அவருக்குத்தான் சிவசேனா கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது.

இந்நிலையில் சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் ஏற்கெனவே பாஜகவுடன் நெருக்கமாக இருந்து கூட்டணி ஆட்சிக்கு ஏற்பாடு செய்து துணை முதல்வராகப் பதவி ஏற்றிருந்தார்.

ஆனால், எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாததால், தேவேந்திர பட்நாவிஸுடன் ஏற்பட்டிருந்த கூட்டணி முறிந்து, மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.

Sharad Pawar 1.jpg

ஆனால், மீண்டும் வாய்ப்புக்காக காத்திருந்த அஜித் பவார் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரிந்து, பாஜகவுடன் இணைந்தார். அது மட்டுமல்லாமல் அதிகமான எம்எல்ஏக்கல் இருப்பதால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தங்களுக்கு சொந்தம் என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சரத்பவார் தரப்பிலும் மனு அளி்க்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் அதிகமான எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இருக்கும் அஜித் பவார்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்றும், சுவர் கடிகாரம் சின்னத்தையும் வழங்கியது.

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே அஜித் பவாரின் வழக்கறிஞர் அபிகல்ப் பிரதாப் சிங், கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

கட்சியின் சின்னம், பெயர் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போதும் தங்களின் தரப்பையும் சேர்க்க வேண்டும், கருத்துக் கேட்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த அஜித் பவார் தரப்பினரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று சரத்பவார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது முடிவு எடுக்க மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேக்கருக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

Sharad Pawar.jpg

இதன்படி வரும் 15ம் தேதிக்குள் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தக் கெடு முடியும் முன்பாக, சரத்பவார் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்