Logo
Logo

முக்கிய செய்தி:

சினிமா

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘பிரம்மயுகம்’ படத்தைப் பாருங்கள் - மம்மூட்டி

AISHWARYA ARUMUGAM13-02-2024
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘பிரம்மயுகம்’ படத்தைப் பாருங்கள் - மம்மூட்டி

நடிகர் மம்மூட்டி பிரம்மயுகம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில்" எந்த முன்முடிவும் இல்லாமல் படத்தைப் பார்க்க வாருங்கள். இப்படம் புதிய திரையனுபவமாக இருக்கும்” என படம் குறித்து பேசியுள்ளார்.

எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதை கொல்லையடித்தவர் நடிகர் மம்மூட்டி.மாதத்திற்கு ஒரு படம் என்ற வரிசையில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆவதுடன் அந்தப்படங்கள் ஹிட் அடித்துக்கொண்டும் உள்ளது. நவம்பர் மாதம் வெளியான காதல் தி கோர் ஓடிடியில் வெளியான அந்த படமும் மாபெரும் வரவேற்பு பெற்றது.

இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வெளியான பூதக்காலம் படத்தில் ரேவதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான அந்த படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில், அந்த இயக்குநர் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள மற்றொரு ஹாரர் த்ரில்லர் படமாக பிரம்மயுகம் உருவாகி உள்ளது. பிரம்மயுகம் படத்தை விக்ரம் வேதா படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து பிரம்மயுகம் திரைப்படத்தின் டீஸர் வெளியாகியிருந்தது. பிரம்மயுகம் திரைப்படம் வரும் பிப்ரவரி 15ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலர் விழா அபுதாபியில் நடைபெற்றது. அதில், பேசிய நடிகர் மம்மூட்டி பிரம்மயுகம் படத்தை பார்க்க விரும்பும் உங்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த படத்தின் ட்ரெய்லர் உங்களுக்குள் நிறைய கணிப்புகளை உருவாக்கியிருக்கலாம். படத்தின் கதை குறித்த எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதால் தான் இதைச் சொல்கிறேன். படத்தின் கதை உங்களின் அனுமானங்களைத் தாண்டி வேறொன்றாக இருக்கும். எந்த ஒரு முன்முடிவு கருத்துகளையும் வைத்துக்கொண்டு படத்தை பார்க்காதீர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்க்க வாருங்கள் எனக் கூறியுள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்