Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுக்க முயன்ற காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

PRITHIVIRAJ23-04-2024
எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுக்க முயன்ற காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பட்டியலினத்தவர்கள், பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்

ராஜஸ்தானின் டாங் பகுதியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பட்டியலினத்து மக்கள், பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடஒதுக்கீட்டை வாக்கு வங்கியைக் கவரும் வகையில் முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது.காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் அரசியலை கையில் எடுத்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோதே, மத அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.அதனால்தான் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி எப்போதுமே சமாதான அரசியலைத்தான் செய்து வருகிறது.

2004ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, பரிசோதனை முயற்சியாக, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவு சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு அளவைக் குறைத்து, அதை முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது.

இந்த பரிசோதனைத் திட்டத்தை ஒட்டுமொத்த தேசத்திலும் நடைமுறைப்படுத்த அப்போதைய காங்கிரஸ் அரசு முயன்றது.2004 முதல் 2010ம் ஆண்டுவரை 4 முறை முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆந்திராவில் செயல்படுத்த காங்கிரஸ் அரசு முயன்றது. ஆனால், அப்போது எழுந்த சட்டப்போராட்டங்கள், சட்ட விழிப்புணர்வு, உச்ச நீதிமன்றத்தின் விழிப்புணர்வு ஆகியவற்றால் நிறைவேற்றப்படவில்லை.

2011ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோதும், இந்தத் திட்டத்தை தேசம் முழுவதும் செயல்படுத்த முயன்றது. எஸ்டி, எஸ்சி பிரிவு இடஒதுக்கீட்டை அளவை வாக்கு வங்கிக்காக செயல்படுத்த முயன்றது.

இடஒதுக்கீட்டை ஒரு குறிப்பிட்ட சமுகத்துக்காக வழங்குவதற்காக எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டைக் குறைப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது.

தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தாதா சாஹேப் அம்பேத்கர் இடஒதுக்கீடு வழங்கியுள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் வழங்க முயல்கின்றன.

காங்கிரஸின் இந்த சதித்திட்டங்களுக்கு மத்தியில் நான் அளிக்கும் வாக்குறுதி என்னவென்றால், எஸ்சி, எஸ்டி , பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு மதத்தின் அடிப்படையில் ஒருபோதும் குறைக்கப்படாது , பிரிக்கப்படாது என்று மோடி உறுதியளிக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்