Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

தேவகடா பேரன் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்: அறிக்கை கேட்கிறது தேசிய மகளிர் ஆணையம்

PRITHIVIRAJ30-04-2024
தேவகடா பேரன் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்: அறிக்கை கேட்கிறது தேசிய மகளிர் ஆணையம்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஹாசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களை தவறாகப் பயன்படுத்தி எடுத்த ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில் அடுத்த 3 நாட்களுக்குள் கர்நாடக போலீஸார் அறிக்கை அளிக்க வேண்டும் என தேசிய மகளி்ர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ரேவண்ணாவின் மகன்.

revanna.jpg

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்து மதச்சார்பற்றஜனதா தளம் போட்டியிடுகிறது. கடந்த 26-ம் தேதி நடந்த மக்களவை 2-ம் கட்ட தேர்தலில், ஹாசன் மக்களவை தொகுதியிலிருந்து ரேவண்ணா 2வது முறையாகப் போட்டியிட்டார்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் பாலியல் வல்லுறவு செய்யும் ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அதில் உள்ள பெண், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தனக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் பல பெண்கள் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் வீடியோ எடுக்கப்பட்டது தற்போது வெளியாகியுள்ளன.

பிரஜ்வால் மற்றும் அவருடைய தந்தை ரேவண்ணாவுக்கு எதிராக அவரின் வீட்டில் பணிபுரியும் பெண் ஒருவர் கடந்த ஞாயிற்று கிழமை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் ஹாசன் மாவட்ட போலீஸார் பிரஜாவல் ரேவண்ணா, அவரின் தந்தை ஹெச்டி ரேவண்ணா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஏராளமான பெண்களுடன் பிரஜாவல் ரேவண்ணா பாலியல் வல்லுறவு கொண்டுள்ள குற்றச்சாட்டையடுத்து, கர்நாடக போலீஸார் விசாரணை நடத்தி 3 நாட்களில் அறிக்கை அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக காவல் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அவர் அந்தக் கடிதத்தில் “ சமூக வலைத்தளத்தில் ரேவண்ணா பல பெண்களை பாலியல்வல்லுறவு செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ncw.jpg

நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் குற்றம் சாட்டப்பட்ட ரேவண்ணாவை கைது செய்ய உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் முக்கியத்துவத்தையும், உறுதிசெய்ய வேண்டும்.

அவர்களுக்கு எதிரான அவமரியாதை மற்றும் வன்முறையை வளர்க்கும் கலாச்சாரம் நிலைபெறுவது தடுக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், மிகவும் வருத்தமடைந்துள்ளோம்.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறீர்கள் உள்ளிட்டவை குறித்தும், வழக்கின் விவரங்கள் குறித்தும் விரிவான அறிக்கையை அடுத்த 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்