Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

காலிஸ்தான் தீவிரவாதி கொலை முயற்சியில் இந்திய அதிகாரிக்கு பங்கு: வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்திக்கு இந்தியா கண்டனம்

PRITHIVIRAJ30-04-2024
காலிஸ்தான் தீவிரவாதி கொலை முயற்சியில் இந்திய அதிகாரிக்கு பங்கு: வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்திக்கு இந்தியா கண்டனம்

காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி வழக்கில் இந்தியாவின் “ரா” உளவு அமைப்பின் முக்கிய அதிகாரிக்கு பங்கு இருக்கிறது என்று வாஷிங்டன் போஸ்ட் நாளேடு வெளியிட்ட செய்திக்கு மத்தியஅரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிவிப்பில் “ தீவிரமான விஷயத்தில் அமெரிக்க நாளேடு வெளியிட்ட செய்தி அறிக்கை உண்மைக்கு மாறானது, தவறான தகவல்கள் கொண்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டு” எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியில் “ காலிஸ்தான் தீவிரவாதி பன்னுன் கொலை முயற்சியில் “ரா” அமைப்பின் அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளதேத் தவிர அந்த அதிகாரியின் பெயர் குறித்து தெரிவிக்கவில்லை. தகவலின் மூலத்தையும் குறிப்பிடவில்லை.

அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை வாங்கி, தற்போது கனடாவில் வாழ்ந்து வருபவர் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதி பன்னுன். இவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் கொலை செய்ய முயற்சி நடந்தது, ஆனால் அந்த கொலை முயற்சியை அமெரிக்க போலீஸார் முறியடித்தனர்.

பன்னுன் கொலை வழக்கில் இந்திய அதிகாரி நிகில் குப்தாவுக்கு தொடர்பு இருப்தாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் கடந்த டிசம்பர் 7ம் தேதி விசாரணை நடத்த மத்திய அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.

அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில் “ பன்னுன் கொலை முயற்சி விவகாரம் இந்திய பாதுகாப்பு விவகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்ய மத்திய அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் நாளேடு வெளியிட்ட செய்தியில் “காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி வழக்கில் இந்தியாவின் “ரா” உளவு அமைப்பின் முக்கிய அதிகாரிக்கு பங்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்ிதத்தொடர்பாளர் ரந்திர்ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் “ தீவிரவாதிகள், கூட்டாகச் செயல்படும் கிரிமினல்கள், உள்ளிட்ட பலர் குறித்து அமெரிக்க அரசு பகிர்ந்துள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசு உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து

விசாரித்து வருகிறது. ஊகத்தின் அடிப்படையில், பொறுப்பற்ற முறையில் வரும் கருத்துக்கள் உதவாது. தீவிரமான விஷயத்தில் அமெரிக்க நாளேடு வெளியிட்ட செய்தி அறிக்கை உண்மைக்கு மாறானது, தவறான தகவல்கள் கொண்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டு” எனத் தெரிவித்துள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்