Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு அடுத்த சிக்கல்! ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் நோட்டீஸ்

PRITHIVIRAJ30-04-2024
சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு அடுத்த சிக்கல்! ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் நோட்டீஸ்

யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனத்துக்கு அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியாக ரூ.27.46 கோடி நிலுவை தொகை வைத்திருப்பதால், ஜிஎஸ்டி நுண்னறிவுப்பிரிவு பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நிலுவைத் தொகையைஉங்களிடம் இருந்து ஏன் வசூலிக்கக் கூடாது என்று கேட்டு ஜிஎஸ்டி நுண்னறிவுப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

யோகா குரு ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி ஆயுர்வேதா குழும நிறுவனம் குறிப்பாக சமையல் எண்ணெய் வர்த்தகத்தில் அதிகம் ஈடுபடுகிறது. இந்நிலையில் சண்டிகர் மண்டலத்தில் உள்ள ஜிஎஸ்டி நுண்னறிவுப் பிரிவு பதஞ்சலி நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தக் கோரி கடந்த 26ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

patanjali.jpg

இது குறித்து பதஞ்சலி நிறுவனம் கூறுகையில் “சண்டிகர் மண்டலத்தில் உள்ள ஜிஎஸ்டி நுண்னறிவுப் பிரிவு பதஞ்சலி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக ரூ.27 கோடியே 46 லட்சத்து 14 ஆயிரத்து 343 நிலுவை இருக்கிறது. இதை ஏன் உங்களிடம் இருந்து வட்டி மற்றும் அபராதத்துடன் வசூலிக்கக் கூடாது.

இந்த எச்சரிக்கை நோட்டீஸ், ஜிஎஸ்டி சட்டம் 2017, பிரிவு 74ன் கீழ், பிரிவு 20ன் கீழ் அனுப்பப்பட்டுள்ளது. இப்போதுவரை ஜிஎஸ்டி நுண்னறிவுப் பிரிவு எச்சரிக்கை நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளது, இந்த நோட்டீஸை எதிர்கொள்ள நிறுவனம் சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனம் ருச்சி சோயா நிறுவனத்தை விலைக்கு வாங்கி நடத்தி வருகிறது. ஆயுர்வேதா பொருட்கள் மட்டும் தயாரித்து வந்த பதஞ்சலி நிறுவனம், ருச்சி சோயாவை வாங்கியபின், சமையல் எண்ணெய், உணவுப் பொருட்கள், எப்எம்சிஜி பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்