Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

Covishield: கோவிஷீல்ட் தடுப்பூசியால் ரத்தக்குழாய் அடைப்பு, பிளேட்லெட் குறைதல் வரலாம்: தடூப்பூசி தயாரித்த அஸ்ட்ராஜென்கா நிறுவனமே ஒப்புதல்

PRITHIVIRAJ30-04-2024
Covishield: கோவிஷீல்ட் தடுப்பூசியால் ரத்தக்குழாய் அடைப்பு, பிளேட்லெட் குறைதல் வரலாம்:  தடூப்பூசி தயாரித்த அஸ்ட்ராஜென்கா நிறுவனமே ஒப்புதல்

கொரோனவில் இருந்து பாதுகாக்க கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இதய ரத்தக்குழாய் அடைப்பு, பிளேட்லெட் குறைபாடு போன்றவை ஏற்படலாம் என்று மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனன்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஸ்ட்ராஜென்கா நிறுவனம் கோஷீல்ட் எனும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி பெருபாலும் குறைந்த வருமானம் உள்ள நாடுகள், நடுத்தர வருமான உள்ள நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டன.

vaccin3.jpg

இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் மூலம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு சப்ளை செய்யப்பட்டன. இந்திய மக்களில் பெரும்பகுதியினர் கோவாக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளையே செலுத்தினர்.

இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிற்காலத்தில் தீவிரமான பக்கவிளைவுகளான ரத்தக்குழாய் அடைப்பு, ரத்த பிளேட்லெட்டுகள் குறைதல், திடீர் மரணம் போன்றவை ஏற்படலாம் என மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜென்கா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசியால் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு ஆளாகிய 50க்கும் மேற்பட்டோர் லண்டன் உயர் நீதிமன்றத்தி் வழக்குத் தொடர்ந்து இழப்பீடு கோரி வருகிறார்கள். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் சார்பில் கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

vaccine1.jpg

இது குறித்து லண்டனில் வெளியாகும் தி டெலிகிராப் நாளேடு வெளியிட்ட செய்தியில் “ கடந்த பிப்ரவரி மாதம் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், தாங்கள் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியால் அரிதான இதய ரத்தக்குழாய் அடைப்பு, பிளேட்லெட் குறைபாடு, திடீர் மரணம்ஆகயவை ஏற்படலாம்” எனத் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள் வாதிடுகையில் “ கோவிஷீல்ட் தடுப்பூசியில் குறைபாடு இருக்கிறது என வாதிட்டனர். இதை அஸ்ட்ராஜென்கா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

2023ம் ஆண்டில் ஜேமி ஸ்காட் என்பவர் மூளையில் நிரந்தமான ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்ததையடுத்து, ஜேமி ஸ்காட் வழக்குத் தொடர்ந்தார். அதன்பி தற்போது 50க்கும் மேற்பட்டோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அஸ்ட்ராஜென்கா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “அன்புக்குரியவர்களை இழந்த அல்லது உடல்நலப் பிரச்சினைகளைப் புகார் அளிப்பவர்களுக்கு நாங்கள் அனுதாபம் தெரிவிக்கிறோம்.

corona positve

நோயாளியின் பாதுகாப்பே எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும், தடுப்பூசிகள் உட்பட அனைத்து மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதிசெய்ய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு தெளிவான மற்றும் கடுமையான தரநிலைகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “ கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகளை தாராளமாக செலுத்தலாம். எதிர்மறையான பாதிப்புகளும், அதற்கான சட்டநடவடிக்கையும் அரிதினும் அரிதானவை” எனத் தெரிவித்துள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்